ஷீரடிசாயி !சரணம்
====================
சாயிநாதா சரணம் ,ஸ்ரீ சாயிமாதா சரணம்
சேயென எம்மைக்காத்தருள் புரியும் -ஸ்ரீசாயிசரணம்
அன்னையும் நீயே,தந்தையும் நீயே
துன்பத்தில் தோள்தரும் தோழனும் நீயே
முன்வினைமுறிக்கும் சீரடிசாயி -ஸ்ரீசாயிசரணம் [சாயிநாதா..]
சீரடிதனிலே தரிசனம் தந்து
பேரருள்புரியும் பாவனமூர்த்தி !
பாரோர்போற்றும் சீரடிசாயி -ஸ்ரீசாயிசரணம் ..[சாயிநாதா..]
தொண்டரின்துன்பம்தொலைத்திடும் சாயி
அண்டினோர் கண்ணீர் துடைத்திடும் சாயி
கண்கண்டதேய்வமாம் சீரடிசாயி -ஸ்ரீசாயிசரணம் [சாயிநாதா]
No comments:
Post a Comment