Tuesday, November 2, 2010

தசாவதாரம் [மெட்டு -மீராபஜன் -पायोजी मैंने राम्रथानाधन पायो ]
     =================================================================================
     கண்ணா மண்ணை உண்ட மன்னா -கார்முகில்வண்ணா
     ,,  ,,  ,,  ,,  ,,  ,,  ,,  ,,  ,,  ,,  ,,  ,,  ,,  ,,  ,,  ,,  ,,  ,,  ,,  ,,  ,,  ,,

            அசுரன் அபகரித்த மறைகளை மீட்கவே
           மீனாய்ப்பிறந்து பட்டபாட்டால் களைத்தேநீ
           அரவணையில் அயர்ந்தாயோ? அரங்கநாதா![கண்ணா மண்ணை.. ]

           அமிர்தம் கடைந்தெடுக்க ஆமையாய் அவதரித்து
          மந்தரமலை சுமந்ததாலே சோர்வடைந்தேநீ
          அரவணையில் துயின்றாயோ ? ஆராவமுதா!..[கண்ணாமண்ணை]

          வராகமாய்ப்பிறந்து இரண்யாக்ஷனை அழித்து
         பூமியைக்கொம்பினில் தாங்கிக் களைத்தேநீ
         பாம்பணையில் படுத்தாயோ? ஸ்ரீபாண்டுரங்கா!..[கண்ணா மண்ணை..]

           நரசிம்மரூபனாய் தூணைப்பிளந்துவந்து
           இரண்யனின் உதரம் கிழித்தே உக்ரம் தணிய
          சேஷ சயனம் செய்தாயோ ?சாரங்கபாணி!..[கண்ணா மண்ணை ]

         வாமனனாய் பலியை மூவடி நிலம்கேட்டு
         ஓங்கி உலகளந்ததாலே ஓய்வேடுக்கவே
         நாகத்தின் மேல் படுத்தாயோ?ஹரினாராயனா!..[கண்ணா மண்ணை,.]

         ஜமதக்கினிமகனாம் பரசுராமனாய் வந்து
         க்ஷத்ரிய குலநாசம் செய்து களைத்தேநீ
        சேஷசயனம் செய்தாயோ? ஜனார்தனா![கண்ணா மண்ணை...]

        தசரதனின்மகனாம் ராமனாய் அவதரித்து
       தசமுகமர்தனம்  செய்தே இளைப்பாற
           புஜங்கசயனம் செய்தாயோ ?புண்டரிகாக்ஷா! [கண்ணா வெண்ணை ]

        பலராமனாய்ப்பிறந்து கலப்பைதனைச் சுமந்து
       பலவிதலீலை புரிந்தே களைப்படைந்து
        பன்னகசயனம் கொண்டாயோ ?பரந்தாமா![கண்ணா வெண்ணை ]

          கீதைதனை ஓத கண்ணனாய் அவதரித்து
          பார்த்தனுக்க்காக தேரோட்டிக்களைத்தேநீ
          பாம்பணையில் படுத்தாயோ? பண்டரினாதா![கண்ணா மண்ணை..]

           தங்கத்தொட்டிலில் உன்னைத் தாலாட்ட நாங்களிங்கே
           ஏங்கிஇருக்க தேவைதானோ பாம்புப்படுக்கை ?
          எங்கள் கலிதீர வாராய் கல்கியுருவில் ?  [கண்ணா மண்ணை ...]
==============================================================================

          

        
      
       

          





      

           

No comments:

Post a Comment