ஐயப்ப பக்தனாய் மாறு [மெட்டு..ஆறுமனமே ,ஆறு..]
--------------------------------------------------------------------------------
ஐயப்ப பக்தனாய் மாறு,..மலை
போகுங்கூட்டத்தில் சேரு ,
`சாமியே ஐயப்பா,சரணம்'ன்னு
சொல்லிச்சொல்லி மலை ஏறு .
,, ,, ,, ,, ,, ,, ,,
அரியுஞ்சிவனும் சேர்ந்ததாலே
பொறந்த ஐயப்பசாமி, ..அவன்
எருமைமூஞ்சி மகிஷியைக்கொல்ல
இறங்கிவந்தான் பூமி,
தாயின்வலியைப்போக்க..காடு
போனான் புலிப்பால் தேடி ,
மகிஷியை வதம் செய்து,மனை
மீண்டான் புலிமேல் ஏறி,
,, ,, ,, ,, ,, [ஐயப்ப......மலையேறு]
நாப்பத்தோரு நாளு நாக்கை
அடக்கி இரு விரதம், ..நம்ம
சாமிக்குநீ பூசைபோட்டு ,
கேளு ஐயப்பசரிதம்,
தூரப்போடு பீடி,
மழிக்காதே மீசைதாடி,
குடிகெடுக்குங்குடியை விடு,
தொடாதே மாமிச உணவை,
,, ,, ,, ,, ,,[ஐயப்ப....ஏறு ]
கருப்புத்துண்டை இடுப்பில்கட்டு,
கழுத்தில் மாலைபோடு,--போகும்
பக்தாளோடு ஒண்ணாக்கூடி
ஐயப்பபஜனை பாடு,
நடநீ மலையநோக்கி,..இரு
முடியத்தலையில் தூக்கி,
நீபோ பயத்தை நீக்கி,--கொஞ்சந்
தூரந்தானே பாக்கி, ,,
,, ,, ,, ,, ,, ,,[ஐயப்ப..ஏறு ]
காடும் மேடும்,கல்லும் முள்ளும்,
நமக்கெல்லாம் வெல்வெட்டு,
பாட்டுப்பாடி காட்டைக்கடந்து,
மலையுச்சியை எட்டு,
பதினெட்டுப்படி ஏறு,-நம்ம
ஐயப்பச்சாமியைப்பாரு,
பொங்கலன்னிக்குப் பொன்னம்பலமேட்டில்
சோதியாய்த்தெரிவாரு,
,, ,, ,, ,,..[ஐயப்ப...ஏறு.]
===============================================================
No comments:
Post a Comment