Wednesday, November 3, 2010

கண்ணனுக்கு வெண்ணை ஏன் அதிகப்ரியம் ?
==========================================
ஸர்ர்ர்ர் ..ஸர்ர்ர்ர் ..ஸர்ர்ர்ர் ..ஸர்ர்ர்ர்
                       ஸர்ர்ரூ ..ஸர்ர்ருன்னு தயிர் கடையும் சத்தம் கேட்குது
                      திறண்டவெண்ணை தாழி விளிம்பில் எட்டிப்பார்க்குது
                        வெள்ளைவெளேர் வெண்ணைவாசனை மூக்கைத்துளைக்குது
                      கள்ளக்ருஷ்ணன் உள்ளம் துள்ளி துள்ளிகுதிக்குது

 
        கைகழுவ யசோதை புறக்கடைக்குச் செல்கிறாள்
       தருணம்பார்த்து கண்ணன் ஒருகைவெண்ணை உண்கிறான்
       சின்னவாயில் வெண்ணை ஈஷி இருக்கக்கண்ட தாய்
       "தின்னையாநீ வெண்ணை?" என்று அதட்டிக்கேட்கிறாள்

                     "கழுவப்போன வழியில் உன்கையிருந்து சிந்திய
                      வெண்ணைவழுக்க விழுந்த என்வாயில் வெண்ணைபட்டது
                      வலிக்குதம்மா!இடுப்பில்என்னைத் தூக்கிவெச்சிக்கோ"
                      என்றுசொல்லி "உம்ம்ம்" என்றுவிசும்பிஅழுகிறான்


        அழும்பிள்ளையை அன்னை இடுப்பில் தூக்கிக்கொள்கிறாள்
        சேயைச் சினந்ததெண்ணி நெஞ்சம்நோக நிற்கிறாள்
        வெண்ணையூட்டி சமாதானப்படுத்த நினைக்கிறாள்
         வெண்ணைத்தாழி நோக்கி அவள் விரைந்துநடக்கிறாள்
                        கடைந்துவைத்த வெண்ணை குறையக்கண்டு திகைக்கிறாள்
                        பதிந்திருந்த கைத்தடத்தைக்கண்டு மலைக்கிறாள்
                        "கள்ளக்க்ருஷ்ணா!வெண்ணையில் உன்கைச்சுவடிருக்கு
                        பொய்சொன்னவாய்க்கு போஜனமில்லை" என்கிறாள்


         "பூனையொன்று பானையருகே போகக்கண்டேனே
           அதுவே வெண்ணைதின்னுருக்கும்"என்று அளக்கிறான்
           "பூனைநாக்கால் நக்கும்,கையால் அள்ளித்திங்காது
            நீயேவெண்ணை தின்னவனென்று அடிக்கவருகிறாள்
                            "குரங்கொன்று பானைதனை நெருங்கக்கண்டேனே
                             திருடியிருக்கும் அதுவேவெண்ணை" என்றுபுளுகறான்
                            "அடிஉதையால் இவன்வாயில் உண்மைவராது "
                              என்றுணர்ந்த தாயும் இனியகுரலில் கேட்கிறாள் :


              "விதவிதமாய் உணவுஉனக்கு ஊட்டிவிட்டாலும்
               வெண்ணைமட்டும்நீ விரும்பி உண்பதேனடா ?"
               அடிவிழாது என்றுகண்டுகொண்ட கண்ணனும்
               அன்னையுள்ளம் உருகுமாறு காரணம்சொல்கிறான் :


                                  "கோபியர்கள் `கருப்பா,கருப்பா!`'என்று கிண்டலாய்
                                     கூவியழைத்து என்னைரொம்பக்கேலி செய்யறா
                                   வெள்ளைவெண்ணையுண்டால் கருமைகரைந்துபோகுமே
                                  என்றுஎண்ணி வெண்ணைவிரும்பிஉண்டேன் "என்கிறான்
                  "கோபியரின்நீர்க்குடத்தை கல்லாலடித்து நீ
                   உடைத்ததாலே கோபங்கொண்டு கேலிசெய்கிறார்
                   போல்லாத்தனம்விட்டால் கருமைகரைந்துமறையுமே
                   வெண்ணையுண்ணத்தேவையில்லை"என்றுமறுக்கிறாள்


                                      கருமைக்காக தாய்தன்மேல் இறக்கம்காட்டுவாள்
                                      என்றுஎதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த
                                       மாயக்கண்ணன் தாயவளின் மனத்தை இளக்கிட
                                       மழலையாக மாயாஜால வார்த்தை மொழிகிறான்:

                     "`அன்னை'போல `வெண்ணை' இனிமையாக ஒலிப்பதால்
                      உன்னைப்போல வெண்ணைமீதும் பிரியம் அதிகமே "
                      யசோதை இதுகேட்டு வெண்ணையாய் உருகிவிடுகிறாள்
                      குட்டிக்கண்ணனைக்கட்டி அணைத்துமுத்தமிடுகிறாள்
=============================================================================================

                              
                           
                          

No comments:

Post a Comment

Saying of the Day

There was an error in this gadget