Wednesday, December 22, 2010

   சுமைதாங்கும் உமாபதி [மெட்டு..இசைத்தமிழ் நீ செய்த ...]
-------------------------------------------------------------------------------------
      ஆதிரையான் ஒரு சுமைதாங்கி,
      பாதிபாகம் அவன் உமைதாங்கி...[ஆதிரையான்..]

                        நதிசுமப்பான் சடைமுடிதனிலே,
                        சதிசுமப்பான் இடப்பாகத்திலே,
                       மதிசுமப்பான் திருச்சிரத்தினிலே,
                        தீசுமப்பான் திருக்கரத்தினிலே...[ஆதிரையான்..]

                       புரமெரிக்க வில்லாய் மலைதனைத்தாங்கியவன் 
                       பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி  வாங்கியவன் .
                       கண்டத்திலே விடத்தை சுமக்கும் சதாசிவன் .
                      தொண்டர் மனச்சுமையால் தளராமல் தாங்குபவன்,..[ஆதிரையான்..]
=========================================================================
   பிள்ளையார் பதினாறு
=======================
சுமுகா,சரணம்.ஏகதந்தா சரணம்.
கபிலா,சரணம் .கஜகர்ணா,சரணம். ...கணேசா,சரணம்
       சின்ன எலிக்கும் உன் வாகனமென்ற
       உன்னதபதவியைக் கொடுத்து உயர்த்தி
       இன்னருள் புரிந்த இறைவா,சரணம்...கணேசா,சரணம்

லம்போதரா,சரணம்.விகடா,சரணம்.
விக்னராஜா,சரணம்.விநாயகா,சரணம்...கணேசா,சரணம்.
          அரியின் சக்கரம் பிடுங்கி விழுங்கி
          தோர்பிக்கரணம் போடவைத்து
           சிரித்து நின்ற கரிமுகா,சரணம்...கணேசா,சரணம்.

 தூமகேது ,சரணம்.கணாத்யக்ஷா,சரணம்.
 பாலச்சந்தரா,சரணம்.கஜானனா,சரணம்...கணேசா,சரணம்.
             கஜவடிவில் குறவள்ளியைத்துரத்தி
             குகனிடம் அவளைச் சரண்புகவைத்து
             நன்மணம் நடத்திய நாயகா,சரணம்...கணேசா,சரணம்.

 வக்ரதுண்டா,சரணம்.சூர்ப்பகர்ணா,சரணம்.
 ஹேரம்பா,ஸ்கந்த பூர்வஜா,சரணம்...கணேசா,சரணம்.
             தொடங்கிய யாவும் தடங்கலே இன்றி
              தொடர்ந்து நடந்து முடிந்திட அருள்வாய்.
               இடர்களைநீக்கும் கடவுளே,சரணம்...கணேசா,சரணம்.
                                                                                              ''            ''        ''      ''
                                                                                              ''            ''        ''       ''
-----------------------------------------------------------------------------------------------

Tuesday, December 21, 2010

ஷ்யாமா!சேஷனுக்கு ஓய்வு  கொடு! 
================================[மெட்டு-மன் தடப்பது ஹரிதர்சனு ]
     ஷ்யாமா, இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்,
     சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்,
    தவழ்ந்தெங்கும் தளிர்விறல் தடங்கள் பதிப்பாய்,
    நவநீதா,உரிவெண்ணையுண்டு களிப்பாய்.[ஷ்யாமா...]

           இருள்நிறை சிறைதனில் பரிதியாய் உதித்த
           அருட்பெருஞ்ச்ஜோதியே,தேவகினந்தனா,
            நாகம் குடைபிடிக்க ,நதிவழிகொடுக்க ,
           கோகுலம் விரைந்த வசுதேவனந்தனா[ஷ்யாமா..]

   பாலூட்டிக்கொல்லவந்த  பூதனையை
   பல்லால் கடித்துயிர்குடித்த ஸ்ரீதரா,   
  கயிற்றால் உரலில்கட்டிவைத்த தாய்முன்
   உரலை இழுத்தவண்ணம் தவழ்ந்த தாமோதரா,[ஷ்யாமா..]

                 பெருமழையில் பரிதவித்தோரைக்காக்க
                 சிறுவிரலால்கிரிசுமந்த கோவர்த்தனா,
               விடநாகததையடக்கி அதன்மேல்
                களினடம்புரிந்த காளிங்கனர்த்தனா[ஷ்யாமா..]

      கோபியர்சுமந்த நீர்க்குடந்தன்னை
      கல்லெறிந்து டைத்த  நந்தகிஷோரா,
      குறும்புத்தோழர் தோள்மேலேறி
      உரிவெண்ணை திருடிய நவநீதசோரா[ஷ்யாமா..]

                     குளிக்குங்க்கோபியர் ஆடையைமறைத்து
                    குரும்பாய்ச்சிரித்த கோகுலபாலா,
                        ஈனர்கை சிக்கிய பாஞ்சாலியவள்
                      மானங்காத்த  தீனதயாளா,[ஷ்யாமா..]

         ஓரடியால் உலகளந்து பலியை
         காலால்வதைக்கவந்த வாமனக்கோலா,
        கால்விரல்ருசிக்கும் சிசுவாய்பிரளய
       காலத்தில் தோன்றிய ஆலிலைபாலா[ஷ்யாமா.]

                         சேய் அழைத்ததுமே  தூணிலே தோன்றி
                        தீயனைமாய்த்த தூயநரசிங்கா,
                        எங்களுக்கிறங்கி இங்கின்று வருவாய் ,
                        பங்கஜ நயனா ஹே,பாண்டுரங்கா[ஷ்யாமா..]
============================================================