மணிகண்டா,சரணம்.[மெட்டு..ஆர்ட் ஆப் லிவிங் பஜன்..சந்திரசேகராய ...]
========================================================================
கோடானுகோடி கதிரவர்கள்கூடி
உதித்தார்ப்போல் ஒளிரும் வதனம்,
குங்குமப்பூங்கோத்தில் தும்பை துளிர்த்தார்ப்போல
புன்முறுவல் தவழும் அதரம் ,
சின்னவிரல்கள் கூட்டி,சின்முத்திரை காட்டும்
உந்தன் சுந்தர கரகமலம்,
[மணிகண்டா சரணம்,தர்மசாஸ்தா சரணம்,
ஐயப்பசாமி சரணம்]
திருமால்மகேசன் திருலீலையாலே
அவதரித்த தர்மசாஸ்தா!
எருமைமுகத்து மகிஷியைக்கொல்ல
வந்துதித்த சபரிவாசா!
அரிஹரபுத்ரா,பக்தரின்மித்ரா!
செய்தோம் உன் நாமஸ்மரணம்
[மணிகண்டாசரணம்....................சாமிசரணம்]
தாயின்நோயைப்போக்க புலிப்பாலுக்காக
வனம்நோக்கி விரைந்த வீரா!
மூவுலகும் மாய்க்கவந்த மகிஷிதன்னை
வதம்செய்து ஒழித்த சூரா!
மகரஜோதியாய் சங்கராந்திநாளில்
பொன்னம்பலமேட்டில் மின்னும்
[மணிகண்டா சரணம், .........சாமிசரணம் .]
-------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment