Thursday, February 17, 2011

திருக்கடவூர் திகழ் அபிராமி !


பருவங்களும் காலம் மாறிடுமே,-நீ
புருவத்தைச் சிறிதே உயர்த்திடினும்!
துருவங்களும் திசை மாறிடுமே -உன்
குறுநகையால் அதர மொட்டவிழ்ந்தால்!(திருக்கடவூர்...)

சுந்தரியே உந்தன் தோளிலொரு கிளி
சொந்தம்போல் சுகமாய்க் குந்திடக்கண்டென்
சிந்தையிலே அழுக்காறு பெருகுதடி!
அந்த நிலை எனக்கும் தந்து அருள் புரி!(திருக்கடவூர்..)

அன்னையே! உந்தன்  கழுத்தினை அணைத்து
கன்னலும் 'தாய்சுகம்' காண்கிறதே!-நான்
அந்நியனோ? நீயென் மாற்றாந்தாயோ?
என்னுயிருன்மேல் சாய்வதென்றோ  தாயே?(திருக்கடவூர்...)

Saturday, February 12, 2011

மலைமந்திர் முருகதரிசனம்

[தில்லி மலை மந்திர் இல் முருகனைத் தரிசித்தபோது மனத்தில் சுறந்த பாட்டு ]


         
கமகமவென குகனின் திருநீறு மணக்குது !
குபுகுபுவென மனத்தில் பாட்டொன்று சுறக்குது!
அரோஹரா'வென பக்தர்ப்பெருங்கூட்டம் கூவுது!
பரவசமாய் என்மனம் பாமலர் தூவுது!

தகதகவென குகனின் வெள்ளிவேல் ஒளிருது!
தரிசனஞ் செய்வோரின் உள்ளங்குளிருது!
சிலுசிலுவென மயில் குகனைச் சுத்திசுத்தியாடுது!
காணக்கண் கொள்ளா இக் காட்சிக்கு ஈடேது?

Tuesday, February 8, 2011

சங்கரரின் ச்லேடை



பவாநி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் சகருணாம்

இதி ஸ்தோதும் வாஞ்சந் கதயதி பவாநி த்வம் இதி ய:

ததைவ த்வம் தஸ்மை திசஸிநிஜ -சாயுஜ்ய -பதவீம்

முகுந்த -ப்ரஹ்மேந்திர-ஸ்புட-மகுட -நீராஜித -பதாம்


இந்த ஸ்லோகத்தில் ச்லேடையணி மூலம் சங்கரர் த்வைத பக்தியிலிருந்து பக்தியும் சக்தியும் ஞானமும் கலந்திருக்கும் ஒருவிதமான அத்வைதநிலைக்கு ஒரே தூக்காகத் தூக்கி விடுகிறார்!

பொருள் :   "பவாநி! நீ தாசனான என் மேலே உன் கருணா கடாக்ஷத்தைச் செலுத்து" என்று பிரார்த்திக்க ஆசைப்படுகிற ஒருவன் 'பவாநி, நீ 'என்று அர்த்தம் தரும் பவாநி த்வம்'என்று கூற ஆரம்பித்த அந்த க்ஷணத்திலேயே நீ அவனுக்கு பிரம்ம,விஷ்ணு,இந்த்ராதியரின் கிரீடத்தால் தீபாராதனை  செய்யப்பட்ட பாதங்களைப் பெறும்படியாக உனதேயான சாயுஜ்ய பதவியைக் கொடுத்துவிடுகிறாய் .

" 'பவாநி த்வம்' என்று சொல்ல ஆரம்பித்த உடனேயே,அம்பாள் பக்தனைத் தானாக்கிக் கொண்டுவிடும் சாயுஜ்யம் தருகிறாள் "என்று சொல்லும் இடத்தில் "பவானித்வம்” என்ற வார்த்தையிலேயே ச்லேடை பண்ணி இருக்கிறார் சங்கரர்!

பக்தன் " பவாநி!நீ" என்ற அர்த்தத்தில் சொல்லப் போக,அதையே அம்பாள் வேறு பொருளில் அவனுக்கு அனுபவ சத்தியமாக ஆக்கிக் கொடுத்து விடுகிறாள்! இவன் சொன்னது "பவாநி!நீ" என்ற அர்த்தத்தில்;அவள் அதை எப்படி அர்த்தம் பண்ணி சாயுஜ்யானுபவமாக்குகிறாள்?

‘பவ' பெயர்ச்சொல்லாக இருக்கும்போது சிவன் பெயர்;அப்போது பவாநி என்றால் பவனின் பத்தினியான அம்பாள்; வினைச்சொல்லாக வரும்போது 'பவ' என்றால் 'இருப்பாயாக!','ஆவாயாக!' என்று பொருள்;['தீர்க்க சுமங்கலி பவ' என்பது உதாரணம் ]

இங்கு 'பவாநி' என்றால் 'ஆவேனாக!' என்று பொருள்.

ஆதலால் 'பவாநி த்வம்' என்பதில் 'பவாநி'யை வினைச்சொல்லாக அர்த்தம் பண்ணிக்கொண்டால் "நீயாக ஆவேனாக!"என்று பொருள்.னுக்ரஹத்தை வாரி வழங்கும் அம்பாள் பக்தன் சொல்வதை இப்படி அர்த்தம் பண்ணிக் கொள்கிறாளாம் !

இவன் என்னவோ அம்பாள் ஒரு கடாக்ஷம் பண்ணினாலே பெரிசு என்று பிரார்த்திக்க நினைக்கிறான்;"சாயுஜ்யம்" என்று ஒன்று உண்டுன்னு கூட தெரியாத பாமரன் அவன் ! ஆனாலும் அவன் "நீ ஆகிறேன்" என்று அர்த்தம் தரும் வார்த்தைகளைச் சொல்லக் கேட்ட அம்பாள் "குழந்தை இப்படிச்சொல்லிட்டானே! நாமாகவே அவன் ஆவதாகச் சொல்றானே!அவன் வார்த்தை பொய்க்கப்படாது." என்று பரம க்ருபை கொண்டு அவனைத் தானாகவே ஆக்குகிற 'நிஜ சாயுஜ்ய' பதவியைக் கொடுத்துவிடுகிறாளாம்!

' பவாநி த்வம்' என்பதற்கு 'பவாநி!நீ' என்பதோடு 'நான் நீ ஆகிறேன்' என்றும் இரண்டாவது அர்த்தம் இருப்பதில்தான் ச்லேடையணி இருக்கிறது; இன்னொரு மூன்றாவது அர்த்தத்திலும் ச்லேடை பொருந்துகிறது !!!

'த்வம்' என்பது தனி வார்த்தையாய் இல்லாமல், ஒரு வார்த்தையிலேயே ஒட்டிக்கொண்டு விகுதியாக வரும்போது 'தன்மை' என்று பொருள்படும்.[உதாரணம்: அமரத்வம் என்றால் அமரத்தன்மை] 'பவாநி, த்வம்' என்று இரண்டு வார்த்தைகளாய் இல்லாமல் 'பவாநித்வம்' என்று ஒரே வார்த்தையாகக் கொண்டால் பவாநியான அம்பாளின் தன்மை என்றாகும் .ஒருவன் 'பவாநி, த்வம்'['பவாநி, நீ'] என்று அவளருளைப் பிரார்த்திக்க ஆரம்பித்ததுமே, அவன் அடுத்த வார்த்தையைச் சொல்லக்கூட அவகாசம் தராமல் அம்பாள் இடைமறித்து, "ஆமாம்பா!நீ நானாகிற நிலை இருக்கத்தான் இருக்கு" என்று சொல்லித் தன்னுடைய தன்மையான 'பவாநித்வ'த்தையே அவனுக்குத் தந்துவிடுகிறாள்

அதனால் நாம் செய்ய வேண்டியது நிஜமான பக்தியோடு அம்பாளின் அடிமையாகி அவளைக் கடாக்ஷத்திர்க்காகப் பிரார்த்திப்பதுதான்! [மேலே எழுதியிருப்பது யாவும் பெரியவாளின் சொற்கள்;என் சொந்த வார்த்தை மிகக்குறைவே]


[சௌந்தர்யலஹரி-(22 )-பெரியவாளின்(தெய்வத்தின்)குரல் .....சுருக்கம்]

Saturday, February 5, 2011

கண்டேன் கண்ணனை![மெட்டு-ஆடுவோமே,பள்ளுபாடுவோமே]
======================
[டிவி யில் பிரளயம் வரப்போவதாக பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்;பிரளயம்
வந்தபோது  ஆலிலையில் கட்டைவிரல் சப்பும் கண்ணன் தெரிந்தான்  என்று படித்தது நினைவுக்கு வந்தது!மனத்தில் ஒரு பெரிய ஆங்க்ஸயிடி எழுந்தநேரம் மனத்தை டைவர்ட்
பண்ணுவதற்காக எழுதிய பாட்டு கீழே!]



     பாடுவேனே,மகிழ்ந்தாடுவேனே,
     ஆலிலைப் பாலனைக் கண்ட ஆனந்தத்தில் .[பாடுவேனே]

              பிரளயம் வருமென்று பலர் கூறினார்;
               அழியும் உலகம் என்று பயங்காட்டினார்;
            ஆலிலையில் அவன் தெரிவானென்று
            ஆவலாய் தரிசிக்கக் காத்திருந்தேன்.[பாடுவேனே]

          
            மனத்தில் எழுந்ததோர் மகாப்ரளயம்;
            "முடிந்ததுன் கதை"என்றதென்னிதயம்;
           பாட்டென்னும் ......இந்தப்பாட்டென்னும்
          பாட்டென்னும் ஆலிலையில் அவன் தோன்றினான்!
          கால்விரலைக் கடித்தபடி எனைத்தீண்டினான்!
         " முடிந்ததா உன் கதை?"என்று எனைச் சீண்டினான்!
           பாட்டாய் இதைப்பாட எனைத்தூண்டினான்![பாடுவேனே]
===========================================================

Friday, February 4, 2011

அம்பாள் நாடகம் [ர.கணபதி யின் தெய்வத்தின் குரலிலிருந்து ..சுருக்கம்]
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
                                       சௌந்தர்யலஹரி [66 ]
   விபஞ்ச்யா காயந்தி  விவித மபதானம் பசுபதே:
   த்வயா-[ஆ]ரப்தே வக்தும்  சலித சிரசா  சாது-வசனே
   ததீயைர்-மாதுர்யை-ரபலபித -தந்த்ரீ கலரவாம்
   நிஜாம் வீணாம் வாணி நிசுலயதி சோலேன நிப்ருதம்:

         இந்த வரிகளில் ஆசார்யாள் ஒரு சின்ன நாடகமே போட்டுக் காட்டி
   விடுகிறார்! இந்த நாடகம் அம்பாளுடைய சதஸில் நடக்கிறது;அம்பாள்
   கச்சேரி கேட்டுண்டு ஆனந்தமா உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்;சாக்ஷாத்
   சரஸ்வதிதான் வீணாகானம் பண்ணுகிறாள் .

           விபஞ்ச்யாகாயந்தி=வீணை வாசித்துக்கொண்டு கூடவே பாடுகிற
          விவிதம் அபதானம் பசுபதே:=சிவனின் விதவிதமான உத்தம      
          சரித்திரங்களை

      அதாவது சிவனின் சிறப்பு பொருந்திய விருத்தாந்தங்களை சரஸ்வதி
வீணையில் வாசிக்கிறாள்.பதிவ்ருதா ரத்னமான அம்பாளுக்கு அதுதான்
பிடிக்கும்;அம்பாள் மனசு சரஸ்வதிக்குத் தெரியும்.

     த்வயா==உன்னால் [அம்பிகையால்]
    வக்தும்  ஆரப்தே=சொல்ல ஆரம்பிக்கப்பட்ட போது
    சலித சிரசா =தலையாட்டிக்கொண்டு 
    சாது வசனே=பாராட்டு மொழி 

      சங்கீதத்தில் சொக்கி லயித்திருந்த  அம்பாள் அவ்வப்போது தலையசைத்து 
ரசிக்கிறாள்[சலித சிரசா].தலையாட்டிக்கொண்டிருந்தவள் இரண்டு பாராட்டு மொழி [சபாஷ்] சொல்ல நினைத்து  சொல்ல ஆரம்பித்தாள்; முழுக்கக்கூடச்சொல்லவில்லை[ஆரப்தே].அம்பாள் பாராட்டு சொல்ல ஆரம்பித்த உடனே  என்ன நடந்தது?

 ததீயைர்=அதனுடைய [அம்பாள் சொல்ல ஆரம்பித்த வசனத்தினுடைய ]
மாதுர்யைர்=மாதுர்யத்தினால் 
அபலபித=அவமதிக்கப்பட்ட 
தந்த்ரீ =வீணைத்தந்திகளின் 
கலரவாம்=இனிய  ஒலியை 

       அதாவது,அம்பாள் சொல்ல ஆரம்பித்த வாக்கின் மாதுர்யத்தால்  தன்னுடைய வீணைத்தந்திகளின்இனிய ஒலி அவமதிக்கப்பட்டதை [சரஸ்வதி பார்த்து]

        இவளுடைய க்ஷணகாலப் பேச்சின் மதுரத்துக்கு முன்னால், சரஸ்வதியின் குரலும் வீணாகானத்தின்மதுரமும் இருந்த இடம் தெரியாமல் போனது!தான் தோற்றுப்போனத்தில்சரஸ்வதி பாடுவதை நிறுத்தித் தலை குனிந்தாள்;வீணை அவமதிக்கப்பட்டதற்கு என்ன செய்தாள்?

    நிஜாம்=தன்னுடைய
   வீணாம்=வீணையை
   வாணி=சரஸ்வதி
   நிசுலயதி=மூடுகிறாள்
   சோலேன=உறையினால்
   நிப்ருதம்=வெளியில் தெரியாதபடி மறைத்து

      அம்பாளுடைய கண்டத்திலிருந்து வந்த சுநாதத்துக்குத் தன் வீணா நாதம் "உறைபோடக் காணாது" என்று ஏற்றுக்கொண்டு வீணையை உறை போட்டு  மூடிவிட்டாள் சரஸ்வதி!

     தன் குரலிலேயே இத்தனை இனிமை இருந்தும் அம்பிகை சரஸ்வதியைப் பெருமைப் படுத்த நினைத்து  தலையாட்டி ரசித்ததோடல்லாமல் பாராட்டுச் சொல்ல ஆரம்பித்தாள்;ஆனால் அந்த குரலினிமை  அவளை  உத்சாகப்படுத்துவதர்க்கு மாறாக வெட்கித்தலை குனிய வைத்தது!இவள் தலை குனிந்தாள்;ஆனால் வீணை?அது தன் குடம் என்கிற தலையை விறைப்பாய் வைத்திண்டிருந்தது! ''தோற்றுப்போன வீணை மூஞ்சியை வெளியே காட்டப்படாது'' என்று நினைத்தவள் அதனுடைய உறையை நன்றாக இழுத்து மூடிவிட்டாள்.

       வாய்ப்பாட்டை நறுக்கென்று நிறுத்தமுடியும்;தந்தி நாதம் அப்படி இல்லையே ;அதற்க்கு அனுரணனம் என்று ஒன்று உண்டு;பழைய மீட்டின்
 டோய்ங்  அனுரணனமாக இழுத்துக்கொண்டே போயிருக்கும் ;அதனால்தான்
"வாயை மூடிக்கோ"என்கிறார்ப்போல் வீணையை உறையால் மூடிட்டாள்.

      அம்பாளுடைய குரலினிமையை உணர்ந்ததும் சரஸ்வதி இப்படி நினைத்திருக்கலாம்:"இப்பேர்ப்பட்ட நாதாம்ருதத்தைக் கண்டத்திலே கொண்ட அம்பாள் என் கானத்தை ரசித்திருக்கவே முடியாது.அவள் ஆனந்தப்பட்டு தலை அசைத்ததெல்லாம் ஈஸ்வர லீலா வைபவத்துக்காகவோ, சாஹித்ய விசேஷத்துக்காகவோதான்!நம் பாட்டை ரசிக்கிறாள் என்று அசடு மாதிரி  நினைத்து நான்பாட்டுக்கு  கானம் பண்ணிக்கொண்டே போனேனே "என்று சரச்வதிக்குத் தோன்றி இருக்கலாம் .இது அவமானத்தை இன்னும் ஜாஸ்தி யாக்கி இருக்கும்.
             
       மொத்தத்தில் ஸ்லோகம் ஒரு நாடகமாக இருக்கிறது: தேவி சந்நிதி;சரஸ்வதி வீணை வாசித்துப் பாடுவது;பரமேச்வரலீலைகள் கிருதிகளில் விரிவது;அம்பாள் சந்தோஷப்பட்டு தலையை அசைப்பது;வாய்விட்டு ஆஹாகாரம் பண்ணுவது;அதன் அலாதியான மாதுர்யம்;சரஸ்வதி வெட்கப்பட்டு தலை குனிவது;வீணையை இழுத்து மூடுவது  என்று ஸீன் ஸீனாகப் போகிறது .நம் மனத்துக்குள் போட்டுப் பார்த்துக் கொள்ளவேண்டிய நாடகம்!
-------------------------------------------------------------------------------------------------------------------------