வேலா!நீ வா! [மெட்டு...ஆர்ட் ஆப் லிவிங் பஜன் ..போலே கிஜெய் ஜெய் ,ஷிவ்ஜீகி ஜெயஜெய் ]
=======================================================================================================
கோலமயிலோனே,வேலா,நீவா,வா!
காத்யாயினியின் ப்ரியபாலா,நீ வா வா!
தேவசேனாபதியே,வேலா நீ வாவா !
பாவைவள்ளி மணவாளா,நீவாவா!
கிணுகிணுவென கழல் இசைபாட,
சிலுசிலுவென மயில் நடமாட,
தகதகவென மின்னும்வேலேந்தி
முருகன்வந்தான் ,மால்மருகன் வந்தான்.
[கந்தன்வந்தான்,உமானந்தன் வந்தான் ,
,, ,, சிவமைந்தன் வந்தான் .]
தொப்பைக் கணபதி தம்பியே,நீவாவா,
அப்பனுக்குப் பாடஞ்சொன்ன சுப்பா நீவாவா ,
சூரசம்ஹாரம் செய்த ஷண்முகா,வா வா,
தீராவினை தீர்க்கும் ஆறுமுகா,வாவா!
``சரவணபவா!'என நாம்பாட,
``ஆரோஹரா"எனயாவரும் கூவ,
அன்னையளித்த சக்திவேலேந்தி
பன்னிருகண்ணனாம் கந்தன் வந்தான்.
[கந்தன்வந்தான் ...............சிவமைந்தன்வந்தான் ]
============================================================
No comments:
Post a Comment