Sunday, November 14, 2010

 கந்தா!உன் நாளைய வேடம் யாரறிவார்?
====================================
     உந்தன் நாளைய வேடத்தை  யாரே  அறிவார் உமைபாலா?
         ஷண்முகா,ஷடானனா,சக்திவேலா!
         வஞ்சிமகள் வள்ளி ப்ரிய மணவாளா!

                 ஆண்டிபண்டாரவேடத்திலே 
                 ஓங்குபழனி மலையுரைந்தாய் !
                  பாங்காய் பரமகுருவேடத்திலே 
                  ஓங்க்காரம்விளக்கினாய் ஏரகத்தில் ![உந்தன் நாளைய.....]

                  விஷமச்சிறுவனின் வேடத்திலே
                  பசித்த ஔவைக்காகப்பழமுதிர்த்தாய் !
                  அந்தணக்கிழவன் வேடத்திலே 
                  சுந்தரிவள்ளியுடன்  லீலை செய்தாய் ![உந்தன்.....]

                 சீர்காழிமழலையாய் அவதரித்து 
                 பார்வதியின் ஞானப்பால்  குடித்து ,
                 ``தோடுடைய செவியன்''  என்றே துவங்கி 
                 கோடானுகோடி கவி புனைந்தாய் ![உந்தன்...]


                 அத்வைதம் நிலைநாட்ட  வந்த 
                   ஆதிசங்கரர்க்கு உதவிடவே 
                  குமரிலபட்டராய்  அவதரித்து 
                  உமிக்காந்தலிலே  தவமிருந்தாய் ![உந்தன்....]
=====================================================================
 

No comments:

Post a Comment