போற்றிசாயிராம் [மெட்டு-சுத்தப்ரம்ம ....]
====================
சீரடிதனிலே உதித்தவராம்
சீறடியால் உலகாள்பவராம்
தீராவினைகளைத் தீர்ப்பவராம்
பாரோர் போற்றும் ஸ்ரீஸாயிராம்
[ஜயஜய போற்றி ஸ்ரீஸாயிராம்,
ஜயஜய போற்றி ஸ்ரீஸாயிராம்
ஜயஜய போற்றி ஸ்ரீஸாயிராம்
ஜயஜய போற்றி ஸ்ரீஸாயிராம் ]
தீயரைத்தீயாய் எரிப்பவராம்
தூயரின் முன்வினை அறுப்பவராம்
நேயரின் நண்பனாய் இருப்பவராம்
சேயெனநம்மைக்காப்பவராம் [ஜயஜய.....ஸ்ரீஸாயிராம் ]
உத்தம அன்பர்க்கு அருள்பவராம்
பக்தர்க்கு முக்தியைத்தருபவராம்
நித்தியராம்-அவர் நிர்மலராம்
சத்தியராம் சீரடி சாயிராம் [ஜயஜய...ஸ்ரீஸாயிராம் ]
============================================================
No comments:
Post a Comment