ஸ்ரீசாயிநாதா சரணம்
======================
கங்கைதீர்த்தம்போல பரமபவித்ரம் ஸ்ரீசாயிநாதன்பாதம்
செங்கரும்புபோல இனிக்கும் அமிர்தம் ஸ்ரீசாயிநாதன்நாமம்
தஞ்சம் என்றோர்க்கு அஞ்சேல் என்றருளும் ஸ்ரீசாயிநாதன்பாதம் வஞ்சம் நிறைந்த நெஞ்சோரைமாற்றும் ஸ்ரீசாயிநாதன் நாமம்
ஜனனமரணபயத்தினை மாய்க்கும் ஸ்ரீசாயிநாமஸ்மரணம்
ஸ்ரீசாயிநாதா!ஸ்ரீசாயிநாதா!ஸ்ரீசாயிநாதா!சரணம் j
எங்கெங்குமின்பம் பொங்கிடவைக்கும் ஸ்ரீசாயிநாம ஸ்மரணம்
மங்காமகிழ்ச்சி மனத்தில் நிறைக்கும் ஸ்ரீசாயிநாம ஸ்மரணம்
இரும்புமனமும் இளகிடவைக்கும் ஸ்ரீசாயிநாம ஸ்மரணம்
ஸ்ரீசாயிநாதா!ஸ்ரீசாயிநாதா!ஸ்ரீசாயிநாதா!சரணம்
சங்கடங்கள் தீர்க்கும் ,சஞ்சலங்கள் போக்கும் ஸ்ரீசாயிநாம ஸ்மரணம்
மங்களம்எங்கும் தங்கிடவைக்கும் ஸ்ரீசாயிநாம ஸ்மரணம்
மனமலங்கள் போக்கி குணநலன்கள் சேர்க்கும் ஸ்ரீசாயிநாமஸ்மரணம்
ஸ்ரீசாயிநாதா!ஸ்ரீசாயிநாதா!ஸ்ரீசாயிநாதா!சரணம்
=================================================================================
No comments:
Post a Comment