Saturday, October 30, 2010

       சாயிநாம மகிமை
========================
துயரங்கள் தீர்க்கும் ஸ்ரீசாயிநாமம்
பவபயம் போக்கும் ஸ்ரீசாயிநாமம்
    [துதிப்போம் சாயிபதம் ..நெஞ்சினில்
     பதிப்போம் சாயிநாமம் ]

தூயரைக்காக்கும் ஸ்ரீசாயிநாமம்
தீயரைத்தாக்கும் ஸ்ரீசாயிநாமம்
   [துதிப்போம்--------------------]

மனமலம் நீக்கும் ஸ்ரீசாயிநாமம்
மனபலம் சேர்க்கும் ஸ்ரீசாயிநாமம்
   [துதிப்போம் .............................]

அஞ்ஞானம் அழிக்கும் ஸ்ரீசாயிநாமம்
மெய்ஞானம் அளிக்கும் ஸ்ரீசாயிநாமம்
    [துதிப்போம் .............................]

இனம், மதம்,ஜாதி, மொழி எனும்பேதம்
அனைத்தையும் கடந்தது சாயிநாமம்
   [துதிப்போம் ]
================================================

No comments:

Post a Comment