Wednesday, October 27, 2010

    முழுமுதற்கடவுளே (மெட்டு -ஹிந்திப்பாட்டு -बीतिना बिताए रेना )
    ==========================================
  முழுமுதற்கடவுளே ! மூஷிகவாஹனா!
  தொழுவோர்க்கருளும் தேவா! கஜானனா! 
                  பெற்றோரை நீசுற்றிவந்து பெற்ற ஞானக்கனியால்
                  பெற்றது தென்னாடு கந்தன் என்ற பெரும்பேறு
                வஞ்சி அஞ்சி வேலனைத்தஞ்சம் அடைந்து
                மணம்கொள்ள வைக்க வேழமாய் வந்துதவிய (முழு......)
  
கயிலை செல்லச்சேரன் கூப்பிட்டபோது 
''கணேசனைப்பூஜித்தபின் கயிலை'' என்றுரைத்த 
ஔவையின் அகவலால் மகிழ்ந்து  துதிக்கையால் 
ஒருகணத்தில் அவளை கயிலையில் சேர்த்த (முழு....)
=====================================================================

No comments:

Post a Comment