பாபாவைப்போற்றுவோம் [மெட்டு]-ராஜாவின்பார்வை.....
========================================================================================================
பாபாவைப்போற்றிப்பாடிடு நித்தம்
மனமாகிடும் சுத்தம்
தெளிவாகிடும் சித்தம்
தொலைந்தோடிடும் துக்கம்
வாழ்வாகிடும் சொர்க்கம்
இடிந்தமசூதியை இருப்பிடமாக்கி
புனிதப்படுத்திய பாவனபாபா
பக்கிரிபோல் பழங்கோணியில் படுத்த
சொக்கத்தங்கமாம் சத்குருபாபா
சீரடிபாபா
ஸ்ரீசாயிபாபா [பாபாவைப்போற்றி....]
எண்ணைதர மறுத்த ஈனரைத்திருத்த
தண்ணீரால் தீபம் ஏற்றிய பாபா
திருகையால் அரைத்த மாவினைத்தூவி
விடநோய் விறட்டிய வைத்தியர் பாபா
சீரடிபாபா
ஸ்ரீசாயிபாபா [பாபாவைப்போற்றி....]
அனைவர்க்கும் மேலே ஒருவனே என்று
உணர்த்தி மதபேதம் ஒழித்தவர் பாபா
தேவை 'ச்ரத்தையும் பொறுமையும்' என்று
உபதேசித்த உத்தமர் பாபா
சீரடிபாபா
ஸ்ரீசாயிபாபா [பாபாவைபோற்றி...]
===============================================================================
No comments:
Post a Comment