Tuesday, October 19, 2010

அம்மனை அலங்கரிப்போம் (மெட்டு- ஹிந்திப்பாட்டு -குங்குரூகிதராஹ் )

            
        அம்மன்மேனியை நாம் அழகாய் அலங்காரம் செய்வோம்
நவராத்திரியில் தாயை சிங்காரம் செய்வோம்
      மூன்றுநாள் துர்க்கையாய் , மூன்றுநாள் லக்ஷ்மியாய்
மூன்றுநாள் சரஸ்வதியாய் துதித்திடுவோம் ( அம்மன்மேனியை....)

1 ) செங்கரும்புவில்லும்  பூங்கணைகள் ஐந்தும்
       அங்குசபாசமும் தாங்கும் மங்கையவள்
சங்கரன்மேனியில் ஒருபங்கானவள்
     சங்குசக்கரபாணி யின் தங்கையாம்..(அம்மன்மேனியை ...)

2 )    பக்தன்சொன்ன சொல்லை மெய்யாக்கிடவே
              தன் தாடங்கத்தை விண்ணில்  விட்டெறிந்தே
       அம்மாவாசைவானில் முழுநிலா காட்டிய
              அன்னை அபிராமவல்லியின் அருள்பெறவே ..(அம்மன்மேனியை...)

3 ) அன்னபூரணியாம் அவள்காசியிலே
        கற்பகாம்பிகையாம் அவள் மயிலையிலே
மதுரைமீனாக்ஷியாய் காஞ்சிகாமாக்ஷியாய்
      நாகைநீலாயதாக்ஷியாய் அருள்புரியும் ...(அம்மன்மேனியை...)

No comments:

Post a Comment