Sunday, October 17, 2010

தரிசனம்

அம்பா காமாட்சி உன் குமிழ்வாயில் குறுநகை
தரிசனம் கனவுதானோ ?
செம்பவழக்குவியலில் முத்தும் முகிழ்ந்ததோ?
விந்தையோ?உண்மைதானோ?
குங்குமப்பூங்கோத்தில் தும்பையும் பூத்ததோ?
கற்பனைக்கொலந்தானோ?
மங்களசெவ்வாயில் திங்கள் உதித்ததோ?
மந்திரஜாலந்தானோ?

 நின்கரம் ஒன்றிலே கரும்பேந்தி இனிமையைக் கரும்பிலே  கூட்டிவைத்தாய்
மென்கரம் ஒன்றிலே மலரேந்தி மென்மையைமலர்களில்   ஏற்றிவைத்தாய்
உன்சிரம்  தாங்கிடும் வெண்ணிலாதன்னில் உன்   தண்ணொளி  தேக்கிவைத்தாய்
என்மனப்பிதற்றல்  உன்  பொற்பதம்  தொட்டதும் பாடலாய்  ஆக்கிவைத்தாய்

1 comment:

  1. இப்போதுதான் உங்கள் வலைப்பூ பார்க்கிறேன். பாடல்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக இந்தப் பாடல் வெகு அழகு.

    /என்மனப்பிதற்றல் உன் பொற்பதம் தொட்டதும் பாடலாய் ஆக்கிவைத்தாய்/

    இந்த வரி ரொம்பப் பிடித்தது.

    ReplyDelete