Wednesday, December 22, 2010

   சுமைதாங்கும் உமாபதி [மெட்டு..இசைத்தமிழ் நீ செய்த ...]
-------------------------------------------------------------------------------------
      ஆதிரையான் ஒரு சுமைதாங்கி,
      பாதிபாகம் அவன் உமைதாங்கி...[ஆதிரையான்..]

                        நதிசுமப்பான் சடைமுடிதனிலே,
                        சதிசுமப்பான் இடப்பாகத்திலே,
                       மதிசுமப்பான் திருச்சிரத்தினிலே,
                        தீசுமப்பான் திருக்கரத்தினிலே...[ஆதிரையான்..]

                       புரமெரிக்க வில்லாய் மலைதனைத்தாங்கியவன் 
                       பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி  வாங்கியவன் .
                       கண்டத்திலே விடத்தை சுமக்கும் சதாசிவன் .
                      தொண்டர் மனச்சுமையால் தளராமல் தாங்குபவன்,..[ஆதிரையான்..]
=========================================================================
   பிள்ளையார் பதினாறு
=======================
சுமுகா,சரணம்.ஏகதந்தா சரணம்.
கபிலா,சரணம் .கஜகர்ணா,சரணம். ...கணேசா,சரணம்
       சின்ன எலிக்கும் உன் வாகனமென்ற
       உன்னதபதவியைக் கொடுத்து உயர்த்தி
       இன்னருள் புரிந்த இறைவா,சரணம்...கணேசா,சரணம்

லம்போதரா,சரணம்.விகடா,சரணம்.
விக்னராஜா,சரணம்.விநாயகா,சரணம்...கணேசா,சரணம்.
          அரியின் சக்கரம் பிடுங்கி விழுங்கி
          தோர்பிக்கரணம் போடவைத்து
           சிரித்து நின்ற கரிமுகா,சரணம்...கணேசா,சரணம்.

 தூமகேது ,சரணம்.கணாத்யக்ஷா,சரணம்.
 பாலச்சந்தரா,சரணம்.கஜானனா,சரணம்...கணேசா,சரணம்.
             கஜவடிவில் குறவள்ளியைத்துரத்தி
             குகனிடம் அவளைச் சரண்புகவைத்து
             நன்மணம் நடத்திய நாயகா,சரணம்...கணேசா,சரணம்.

 வக்ரதுண்டா,சரணம்.சூர்ப்பகர்ணா,சரணம்.
 ஹேரம்பா,ஸ்கந்த பூர்வஜா,சரணம்...கணேசா,சரணம்.
             தொடங்கிய யாவும் தடங்கலே இன்றி
              தொடர்ந்து நடந்து முடிந்திட அருள்வாய்.
               இடர்களைநீக்கும் கடவுளே,சரணம்...கணேசா,சரணம்.
                                                                                              ''            ''        ''      ''
                                                                                              ''            ''        ''       ''
-----------------------------------------------------------------------------------------------

Tuesday, December 21, 2010

ஷ்யாமா!சேஷனுக்கு ஓய்வு  கொடு! 
================================[மெட்டு-மன் தடப்பது ஹரிதர்சனு ]
     ஷ்யாமா, இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்,
     சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்,
    தவழ்ந்தெங்கும் தளிர்விறல் தடங்கள் பதிப்பாய்,
    நவநீதா,உரிவெண்ணையுண்டு களிப்பாய்.[ஷ்யாமா...]

           இருள்நிறை சிறைதனில் பரிதியாய் உதித்த
           அருட்பெருஞ்ச்ஜோதியே,தேவகினந்தனா,
            நாகம் குடைபிடிக்க ,நதிவழிகொடுக்க ,
           கோகுலம் விரைந்த வசுதேவனந்தனா[ஷ்யாமா..]

   பாலூட்டிக்கொல்லவந்த  பூதனையை
   பல்லால் கடித்துயிர்குடித்த ஸ்ரீதரா,   
  கயிற்றால் உரலில்கட்டிவைத்த தாய்முன்
   உரலை இழுத்தவண்ணம் தவழ்ந்த தாமோதரா,[ஷ்யாமா..]

                 பெருமழையில் பரிதவித்தோரைக்காக்க
                 சிறுவிரலால்கிரிசுமந்த கோவர்த்தனா,
               விடநாகததையடக்கி அதன்மேல்
                களினடம்புரிந்த காளிங்கனர்த்தனா[ஷ்யாமா..]

      கோபியர்சுமந்த நீர்க்குடந்தன்னை
      கல்லெறிந்து டைத்த  நந்தகிஷோரா,
      குறும்புத்தோழர் தோள்மேலேறி
      உரிவெண்ணை திருடிய நவநீதசோரா[ஷ்யாமா..]

                     குளிக்குங்க்கோபியர் ஆடையைமறைத்து
                    குரும்பாய்ச்சிரித்த கோகுலபாலா,
                        ஈனர்கை சிக்கிய பாஞ்சாலியவள்
                      மானங்காத்த  தீனதயாளா,[ஷ்யாமா..]

         ஓரடியால் உலகளந்து பலியை
         காலால்வதைக்கவந்த வாமனக்கோலா,
        கால்விரல்ருசிக்கும் சிசுவாய்பிரளய
       காலத்தில் தோன்றிய ஆலிலைபாலா[ஷ்யாமா.]

                         சேய் அழைத்ததுமே  தூணிலே தோன்றி
                        தீயனைமாய்த்த தூயநரசிங்கா,
                        எங்களுக்கிறங்கி இங்கின்று வருவாய் ,
                        பங்கஜ நயனா ஹே,பாண்டுரங்கா[ஷ்யாமா..]
============================================================

Sunday, November 28, 2010

   மணிகண்டா,சரணம்.[மெட்டு.. க்ருஷ்ணக்ருஷ்ணா,முகுந்தா,ஜனார்தனா...]
=================================================================
    மணிகண்டா,சரணம்,சாமிஐயப்பா,..தர்ம
   சாஸ்தாவே,சரணம் சாமிஐயப்பா,
    வரவேணும் துணையாய் நீ ஐயப்பா,..எமக்கு
     தரவேணும் திருக்காட்சி ஐயப்பா.[மணிகண்டா.....]

                         ஒருமண்டல விரதம் அனுசரிப்போம்,.ஐந்து
                          புலன்களையும் அடக்கி இருப்போம் ,
                          போதைதரும் மதுவைத்தொடமறுப்போம்,..புலால்
                          உணவினையும் வெறுத்துத் துறப்போம்.[மணிகண்டா...]

   விதித்த நியமங்கள் யாவும் கடைபிடிப்போம்,எழும்
   இச்சைகள் யாவும் முறியடிப்போம்,
   இடுப்பினிலே கருபபுத்துணி உடுப்போம் ,தலையில்
   இருமுடியைத்தூக்கிவைத்து நடப்போம்.[மணிகண்டா..]

                         உன்னைக்காண மலையேறத்துணிந்தோம் ,..புனித
                        மாலையினை மார்பினிலே  அணிந்தோம்,
                        மனத்தாலுன் மலர்ப்பாதம் பணிந்தோம்.,.உந்தன்
                        நாமத்தையே ஓயாமல்  மொழிந்தோம்.[மணிகண்டா..]

    கட்டாந்தரையே பட்டுமெத்தையாய்ப்படுப்போம்,..கணந்
    தட்டாமலுன் நாமத்தையே ஜெபிப்போம்,
    கஷ்டங்களைச்சோதனையாய் நினைப்போம்,..அதை
    இஷ்டத்தோடு அனுபவித்துக் கடப்போம்.[மணிகண்டா..]

                    சூறாவளியோ,சீறும் சுனாமியோ..உன்பேர்
                    கூறியதும் மாருதமாய் மாறுமே.
                    காட்டில்வழிபறிக்கும் கள்வர்மனத்திலும் ..உன்பேர்
                    கேட்டதுமே பக்திரசம் ஊறுமே.[மணிகண்டா..]
========================================================================

      ஐயப்பா,நீ மெய்யப்பா.[மெட்டு..ஹிந்தி..மேரே மெஹபூப் நஜா]
=============================================================================================
     மாலரன்[மால்+அரன்] மைந்தா,ஐயப்பா,
      அபயந்தருவதுன் கையப்பா,
      பொன்னும்பொருளும் பொய்யப்பா,
      நீமட்டுமே மெய்யப்பா.[மாலரன்..]

                     மைந்தனாய் மடியினிலே நீவளர
                      பந்தளமன்னன் செய்ததென்ன மாதவமோ?
                     சிகரத்திலுன் கோயில் அமைந்திடவே
                     சபரிமலை செய்ததென்ன புண்ணியமோ?
                                  ,,                      ..                         ,,               ,,[மாலரன்..]
 
     மலையேறத்துணிந்து மார்பில் மாலையணிந்து,
     மதுமாமிசம்மறந்து,சுகம்துறந்து,
    விரதமிருந்து,இருமுடிசுமந்து,
     வருவோர்க்கு உன்காட்சி பெருவிருந்து.
                 ,,                    ,,                     ,,                  ,,       [மாலரன்..]

                     பதினெண்படியேறிகாணும் உன்காட்சி ,
                     பக்தர்களைப் பித்தர்களாய் மாற்றுதையா,
                    பொன்னம்பலமேட்டில் மகரஜோதியாய்நீ
                     மின்னக்கண்டு உன்னை மனம் போற்றுதையா,
                                     ,,                       ,,                    ,,                 ,,[மாலரன்..]

     தேடிவந்தோம் நாங்களுந்தன் சந்நிதியை,
      நாடிவந்தோம் நொந்தவாழ்வில் நிம்மதியை,
     பாடிவந்தோம் உன்னைப்போற்றுந்திருத்துதியை,
     வாடுமெமக்கருள்வாயே  நற்கதியை,
        ,,                         ,,                       ,,                  [மாலரன்.....]
=====================================================================









  



 
 


 

Saturday, November 27, 2010

      ஐயப்பா,போற்றி,போற்றி.
----------------------------------------------
     மோகினிவடிவெடுத்த அரியோடரன் சேர
     அவதரித்த அழகா, போற்றி,
     மகவற்ற பந்தளமன்னன் மகனாய்ப்பிறந்த
    மணிகண்டசாமி,போற்றி.
          [போற்றி,போற்றி,போற்றி,போற்றி.
           ,,                    ,,                   ,,                   ,,       ]

                    தாயவள் நோய்நீக்க புலிப்பாலுக்காக வனம்
                    புறப்பட்ட பாலா போற்றி,
                     எருமைமுக மகிஷியை வனத்தில்வதம் செய்த
                     வீராதி வீரா,போற்றி,
           [போற்றி.................................................போற்றி]

    புலிவாகனனாக பந்தளம் திரும்பிய
    புனித ஐயப்பா,போற்றி,
    அம்பெய்து சபரியில் கோயில்கொண்டருளிய
    சபரிகிரீசா,போற்றி,
              [போற்றி.................................................போற்றி.]

                         பொன்னம்பலமேட்டில் மன்னன்முன் தோன்றிய
                          திவ்யஜோதியே, போற்றி,
                         இந்திரனை அவன்வெல்ல சக்தியாயுதம் தந்த
                         தர்மசாஸ்தாவே,போற்றி.
              [போற்றி.......................................................போற்றி]

    ஞான ஒளியூட்டும் சின்முத்திரைகட்டும்
    தீனதயாளா  ,போற்றி,
    மலையேறி தரிசிக்கவருவோரை ரட்சிக்கும்
    மார்க்கபந்துவே ,போற்றி.
                   [போற்றி...................................................போற்றி]

                             மூவாறுபடிஏறி தரிசிப்பவர் தொழும் '
                             தேவாதிதேவா,போற்றி,
                              கண்கண்டகடவுளே,மணிகண்டசாமியே,
                              கலியுகவரதா,போற்றி,
                   [போற்றி...........................................................போற்றி]
==================================================================
ஐயப்ப பக்தனாய் மாறு [மெட்டு..ஆறுமனமே ,ஆறு..]
--------------------------------------------------------------------------------
       ஐயப்ப பக்தனாய் மாறு,..மலை
      போகுங்கூட்டத்தில் சேரு ,
     `சாமியே ஐயப்பா,சரணம்'ன்னு
      சொல்லிச்சொல்லி மலை ஏறு .
       ,,           ,,       ,,          ,,       ,,         ,,        ,,

                    அரியுஞ்சிவனும் சேர்ந்ததாலே
                      பொறந்த ஐயப்பசாமி, ..அவன்
                    எருமைமூஞ்சி மகிஷியைக்கொல்ல
                   இறங்கிவந்தான் பூமி,
                               தாயின்வலியைப்போக்க..காடு
                              போனான் புலிப்பால் தேடி ,
                               மகிஷியை வதம் செய்து,மனை
                                மீண்டான் புலிமேல் ஏறி,
                                ,,               ,,          ,,      ,,         ,,  [ஐயப்ப......மலையேறு]


                நாப்பத்தோரு நாளு நாக்கை
                அடக்கி இரு விரதம், ..நம்ம
               சாமிக்குநீ பூசைபோட்டு ,
                கேளு ஐயப்பசரிதம்,
                               தூரப்போடு பீடி,
                             மழிக்காதே மீசைதாடி,
                             குடிகெடுக்குங்குடியை விடு,
                             தொடாதே மாமிச உணவை,
                                ,,             ,,           ,,            ,,          ,,[ஐயப்ப....ஏறு ]

           கருப்புத்துண்டை இடுப்பில்கட்டு,
           கழுத்தில் மாலைபோடு,--போகும்
           பக்தாளோடு ஒண்ணாக்கூடி
           ஐயப்பபஜனை பாடு,
                                 நடநீ மலையநோக்கி,..இரு
                                 முடியத்தலையில் தூக்கி,
                                 நீபோ பயத்தை நீக்கி,--கொஞ்சந்
                                 தூரந்தானே பாக்கி,            ,,
                               ,,     ,,        ,,       ,,    ,,     ,,[ஐயப்ப..ஏறு ]

          
            காடும் மேடும்,கல்லும் முள்ளும்,
            நமக்கெல்லாம் வெல்வெட்டு,
           பாட்டுப்பாடி காட்டைக்கடந்து,
           மலையுச்சியை எட்டு,
                               பதினெட்டுப்படி ஏறு,-நம்ம
                                ஐயப்பச்சாமியைப்பாரு,
                             பொங்கலன்னிக்குப் பொன்னம்பலமேட்டில்
                             சோதியாய்த்தெரிவாரு,
                               ,,            ,,             ,,          ,,..[ஐயப்ப...ஏறு.]
===============================================================





                                
          

                        

                              
                              
                              
                                       
                              



                            

Thursday, November 25, 2010

     மணிகண்டா,சரணம்.[மெட்டு..ஆர்ட் ஆப் லிவிங் பஜன்..சந்திரசேகராய ...]
========================================================================
      கோடானுகோடி கதிரவர்கள்கூடி
     உதித்தார்ப்போல் ஒளிரும் வதனம்,
     குங்குமப்பூங்கோத்தில்  தும்பை துளிர்த்தார்ப்போல
     புன்முறுவல் தவழும் அதரம் ,
    சின்னவிரல்கள் கூட்டி,சின்முத்திரை காட்டும்
   உந்தன் சுந்தர கரகமலம்,
     [மணிகண்டா சரணம்,தர்மசாஸ்தா சரணம்,
      ஐயப்பசாமி சரணம்]

                  திருமால்மகேசன் திருலீலையாலே
                   அவதரித்த தர்மசாஸ்தா!
                 எருமைமுகத்து மகிஷியைக்கொல்ல
                 வந்துதித்த சபரிவாசா!
                 அரிஹரபுத்ரா,பக்தரின்மித்ரா!
                 செய்தோம் உன் நாமஸ்மரணம்
   [மணிகண்டாசரணம்....................சாமிசரணம்]


        தாயின்நோயைப்போக்க புலிப்பாலுக்காக
         வனம்நோக்கி விரைந்த வீரா!
         மூவுலகும் மாய்க்கவந்த மகிஷிதன்னை
       வதம்செய்து ஒழித்த சூரா!
        மகரஜோதியாய் சங்கராந்திநாளில்
       பொன்னம்பலமேட்டில் மின்னும்
   [மணிகண்டா சரணம், .........சாமிசரணம் .]
-------------------------------------------------------------------------------------------

Saturday, November 20, 2010

வேலா!நீ வா! [மெட்டு...ஆர்ட் ஆப் லிவிங் பஜன்  ..போலே கிஜெய் ஜெய் ,ஷிவ்ஜீகி ஜெயஜெய் ]
=======================================================================================================
 கோலமயிலோனே,வேலா,நீவா,வா!
  காத்யாயினியின் ப்ரியபாலா,நீ வா வா!
 தேவசேனாபதியே,வேலா நீ வாவா !
  பாவைவள்ளி மணவாளா,நீவாவா!

             கிணுகிணுவென கழல் இசைபாட,
             சிலுசிலுவென  மயில் நடமாட,
             தகதகவென மின்னும்வேலேந்தி
              முருகன்வந்தான் ,மால்மருகன் வந்தான்.
           [கந்தன்வந்தான்,உமானந்தன் வந்தான் ,
            ,,                   ,,           சிவமைந்தன் வந்தான் .]


 தொப்பைக் கணபதி தம்பியே,நீவாவா,
  அப்பனுக்குப் பாடஞ்சொன்ன சுப்பா நீவாவா ,
சூரசம்ஹாரம் செய்த ஷண்முகா,வா வா,
 தீராவினை தீர்க்கும் ஆறுமுகா,வாவா! 

                         ``சரவணபவா!'என நாம்பாட,
                          ``ஆரோஹரா"எனயாவரும் கூவ,
                              அன்னையளித்த சக்திவேலேந்தி
                              பன்னிருகண்ணனாம் கந்தன் வந்தான்.
                           [கந்தன்வந்தான் ...............சிவமைந்தன்வந்தான் ]
============================================================

Friday, November 19, 2010

ஆறெழுத்து  நூற்றெட்டு [108 ]
    [மெட்டு..ஹிந்திபஜன் ..அனுப்ஜலோட்டாவின்  ``ஜக்மே   சுந்தர் ஹை தோநாம்.."
=============================================================
       ஓம்சரவணபவா சரணம் ,ஓம்சரவண பவா சரணம்,
         ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா  சரணம்,
         ,,        ,,        ,,        ,,        ,,        ,,       ,,        ,,        ,,        ,,        ,,        ,,        ,,      ,,

                      கனிகிட்டாத  காரணத்தாலே
                      சினந்ததுபோலொரு  லீலைசெய்து
                      அனைத்தும் துறந்து  ஆண்டிக்கோலம்
                      புனைந்த  பழநிபாலா!
         ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா  சரணம் ,
         ,,      ,,        ,,       ,,        ,,        ,,        ,,       ,,        ,,       ,,       ,,       ,,        ,,        ,,     ,,


       ஓம்சரவண பவாசரணம் ,ஓம்சரவண பவாசரணம் ,
     ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவாசரணம் ,
      ,,        ,,         ,,         .,,        ,,        ,,        ,,        ,,       ,,        ,,         ,,        ,,       ,,

                     பரமனுந்திருவாய்  மூடியே  உந்தன்
                    விரைகழலருகே  வினயமாய் அமர ,
                    பிரணவம் விளக்கி  சிவகுருவான
                     ஏரகஸ் வாமிநாதா!
         ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,
         ,,             ,,            ,,               ,,                    ,,                   ,,                  ,,                   ,,


         ஓம்சரவண பவாசரணம் ,ஓம்சரவண பவாசரணம் ,
         ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவாசரணம் ,
       ,,             ,,                ,,                           ,,                         ,,                          ,,
                      அரிமகள் அம்ருதவல்லியாய்ப்பெருந்தவம்
                      புரிந்தே இந்திரன்மகளாய்ப்பிறந்த
                      சுரகுஞ்சரியை  நன்மணங் கொண்ட
                       திருப்பரங்குன்றக் குமரா!
           ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,
             ,,         ,,            ,,                 ,,                     ,,                         ,,                         ,,
   

          ஓம்சரவண பவாசரணம் ,ஓம்சரவண பவாசரணம் ,
          ஓம்சரவண பவா, ஓம்சரவண பவா,ஓம்சரவண பவாசரணம் ,
                ,,                 ,,                ,,                       ,,                 ,,                ,,                 ,,
                            எழில்மிகு குறமகள் வள்ளியின்முன்னே
                             கிழமுனிவரின் வேடத்தில் வந்து
                             பழகியே பற்பல லீலைகள்  புரிந்த
                             பழமுதிர்ச் சோலை வேலா!
          ஓம்சரவண பவா, ஓம்சரவண பவா,ஓம்சரவண பவாசரணம் ,
             ,,                         ,,                            ,,                                 ,,                            ,,


         ஓம்சரவண பவாசரணம் ,ஓம்சரவண பவாசரணம்,
         ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவாசரணம்,
           ,,              ,,              ,,                 ,,                ,,                ,,                ,,                ,,
                          திருமால்செல்வி  சுந்தரவல்லியாய்
                          அருந்தவம்புரிந்து  மறுபிறவியிலே
                           குறமகளான வள்ளியை மணந்த
                            திருத்தணிகை முருகா!
           ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவாசரணம்,
           ,,                             ,,                              ,,                                 ,,                         ,,


           ஓம்சரவண பவாசரணம், ஓம்சரவண பவாசரணம் ,
           ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவாசரணம்,
            ,,                  ,,                   ,,                         ,,                           ,,                        ,,
                                 ஆறெழுத்துள்ள உன்பேர்ஜெபிப்போர்க்கு
                                   நீறுடன் பன்னீரிலைதனையருளி
                                   தீராநோய் களைத் தீர்த்தருள்புரியும்
                                    சீரலைவாய் முருகா!
             ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா, ஓம்சரவண பவாசரணம் ,
              ,,                                      ,,                                         ,,                                      ,,
   

            ஓம்சரவண பவாசரணம், ஓம்சரவண பவாசரணம் ,
           ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா, ஓம்சரவண பவாசரணம் ,
             ,,                                             ,,                                        ,,                                    ,,
                                   ஆறுபடை யமர்  ஆண்டவன்பேரை
                                     நூற்றெட்டுமுறை நெஞ்சில்ஜெபிப்போம்
                                    சூரசம்ஹாரன் பேரருளாலே
                                     ஈரெட்டாய் வாழ்வோம் ,
              ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா, ஓம்சரவண பவாசரணம்,
                ,,                                        ,,                                     ,,                                     ,,
               ,,                                         ,,                                     ,,                                     ,,
              ,,                                        ,,                                       ,,                                     ,,

                       சரணம்சரணம்  ஓம்சரவண பவா!
                        ,,                   ,,                     ,,                   ,,
                      ,,                    ,,                     ,,                   ,,
                     ,,                     ,,                     ,,                     ,,
============================================================================



               


                    


 
 

Sunday, November 14, 2010

 கந்தா!உன் நாளைய வேடம் யாரறிவார்?
====================================
     உந்தன் நாளைய வேடத்தை  யாரே  அறிவார் உமைபாலா?
         ஷண்முகா,ஷடானனா,சக்திவேலா!
         வஞ்சிமகள் வள்ளி ப்ரிய மணவாளா!

                 ஆண்டிபண்டாரவேடத்திலே 
                 ஓங்குபழனி மலையுரைந்தாய் !
                  பாங்காய் பரமகுருவேடத்திலே 
                  ஓங்க்காரம்விளக்கினாய் ஏரகத்தில் ![உந்தன் நாளைய.....]

                  விஷமச்சிறுவனின் வேடத்திலே
                  பசித்த ஔவைக்காகப்பழமுதிர்த்தாய் !
                  அந்தணக்கிழவன் வேடத்திலே 
                  சுந்தரிவள்ளியுடன்  லீலை செய்தாய் ![உந்தன்.....]

                 சீர்காழிமழலையாய் அவதரித்து 
                 பார்வதியின் ஞானப்பால்  குடித்து ,
                 ``தோடுடைய செவியன்''  என்றே துவங்கி 
                 கோடானுகோடி கவி புனைந்தாய் ![உந்தன்...]


                 அத்வைதம் நிலைநாட்ட  வந்த 
                   ஆதிசங்கரர்க்கு உதவிடவே 
                  குமரிலபட்டராய்  அவதரித்து 
                  உமிக்காந்தலிலே  தவமிருந்தாய் ![உந்தன்....]
=====================================================================
 

Friday, November 5, 2010

  கண்ணா வா [மெட்டு..மலர்ந்தும் மலராத பாதிமலர்போலே ....]
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அடர்ந்த இருள்சூழ்ந்த சிறையில் தேவகிக்குப்
 பிறந்த முகில்வண்ணனே ..மாமன்
 வருமுன் சிறைவிடுத்து தந்தைதோள்அமர்ந்து
விரைந்த மாயக்கண்ணனே

            நதியும்வழி கொடுக்க நாகம் குடைபிடிக்க
            சென்ற ஜகன்னாதனே ..நந்த
            கோபகுமரனாக யசோதாநந்தனாக
            வளர்ந்த நவநீதனே
   [ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ ..கண்ணே
   ''        ''        ''        ''       ''       ''       '''        ''''             '                 ''''''     '''''            ]

         மண்ணை உண்ட உன்னை வாய்திறந்துகாட்ட
         சொன்ன அன்னைமுன்னே ..யசோதைஅன்னைமுன்னே
        சின்னஞ்சிறியவாய் திறந்து அண்டசராசரங்கள்
         காட்டி அசரவைத்தாய் ..தாயைத்திகைக்கவைத்தாய்

                 விஷமம்தாங்காமல் கயிற்றால்தாயுன்னை
                 உரலில்கட்டிவைத்தால் ...அந்த
                 உரலை இழுத்தவண்ணம் தவழ்ந்து `தாமோதரன்'
                 என்றேபேர் எடுத்தாய் ..தாமோதரன்என்றேபேர்எடுத்தாய்
                                                              [ஆரிராராரோ...]
      
          கோபிகன்னியர்கள் சுமந்த நீர்க்குடத்தை
         கல்லாலடித்து உடைத்தாய் ..அவர்
          காணுமுன்னர்மறைந்தோடி ஒளிந்துநின்று
         குறுமபுசெய்து சிரித்தாய் ..குறுமபுசெய்துசிரித்தாய்

                      தோழர்தோளேறி தாழி உடைத்து வெண்ணை
                      திருடியுண்டு களித்தாய்..தட்டிக்
                       கேட்டதாய்முன்னே ஏதும்அறியாத
                     பிள்ளைபோல நடித்தாய் ..நல்ல
                        ''    ''       ''        ''       ''       ''     ''     ''[ஆரிராராரோ...]

          பஞ்சைமிஞ்சும்உந்தன் பிஞ்சுவிறல்பதிய
         தவழ்ந்துவருவாயடா..எங்கள்
          இல்லம்வருவாயடா ..வண்ண
         மயிலிறகுசூடி குழலைஊதி  எங்கள்
            உள்ளம் உரைவாயடா ...''      ''
           ''            ''            ''              ''     
                          வெல்லச்சீடையுடன் வெண்ணைமுறுக்குசெய்து
                           செல்லமே! காத்திருக்கோம் ...நீ
                         குறும்புசெய்தாலும் பொறுமைஇழக்காமல்
                         கண்ணனே காத்திருக்கோம் ..மணி
                         வண்ணனே காத்திருக்கோம் [ஆரிராராரோ..]
----------------------------------------------------------------------------------------------------------------

         
                                                                              [ஆரிராராரோ...]

         

Wednesday, November 3, 2010

கண்ணனுக்கு வெண்ணை ஏன் அதிகப்ரியம் ?
==========================================
ஸர்ர்ர்ர் ..ஸர்ர்ர்ர் ..ஸர்ர்ர்ர் ..ஸர்ர்ர்ர்
                       ஸர்ர்ரூ ..ஸர்ர்ருன்னு தயிர் கடையும் சத்தம் கேட்குது
                      திறண்டவெண்ணை தாழி விளிம்பில் எட்டிப்பார்க்குது
                        வெள்ளைவெளேர் வெண்ணைவாசனை மூக்கைத்துளைக்குது
                      கள்ளக்ருஷ்ணன் உள்ளம் துள்ளி துள்ளிகுதிக்குது

 
        கைகழுவ யசோதை புறக்கடைக்குச் செல்கிறாள்
       தருணம்பார்த்து கண்ணன் ஒருகைவெண்ணை உண்கிறான்
       சின்னவாயில் வெண்ணை ஈஷி இருக்கக்கண்ட தாய்
       "தின்னையாநீ வெண்ணை?" என்று அதட்டிக்கேட்கிறாள்

                     "கழுவப்போன வழியில் உன்கையிருந்து சிந்திய
                      வெண்ணைவழுக்க விழுந்த என்வாயில் வெண்ணைபட்டது
                      வலிக்குதம்மா!இடுப்பில்என்னைத் தூக்கிவெச்சிக்கோ"
                      என்றுசொல்லி "உம்ம்ம்" என்றுவிசும்பிஅழுகிறான்


        அழும்பிள்ளையை அன்னை இடுப்பில் தூக்கிக்கொள்கிறாள்
        சேயைச் சினந்ததெண்ணி நெஞ்சம்நோக நிற்கிறாள்
        வெண்ணையூட்டி சமாதானப்படுத்த நினைக்கிறாள்
         வெண்ணைத்தாழி நோக்கி அவள் விரைந்துநடக்கிறாள்
                        கடைந்துவைத்த வெண்ணை குறையக்கண்டு திகைக்கிறாள்
                        பதிந்திருந்த கைத்தடத்தைக்கண்டு மலைக்கிறாள்
                        "கள்ளக்க்ருஷ்ணா!வெண்ணையில் உன்கைச்சுவடிருக்கு
                        பொய்சொன்னவாய்க்கு போஜனமில்லை" என்கிறாள்


         "பூனையொன்று பானையருகே போகக்கண்டேனே
           அதுவே வெண்ணைதின்னுருக்கும்"என்று அளக்கிறான்
           "பூனைநாக்கால் நக்கும்,கையால் அள்ளித்திங்காது
            நீயேவெண்ணை தின்னவனென்று அடிக்கவருகிறாள்
                            "குரங்கொன்று பானைதனை நெருங்கக்கண்டேனே
                             திருடியிருக்கும் அதுவேவெண்ணை" என்றுபுளுகறான்
                            "அடிஉதையால் இவன்வாயில் உண்மைவராது "
                              என்றுணர்ந்த தாயும் இனியகுரலில் கேட்கிறாள் :


              "விதவிதமாய் உணவுஉனக்கு ஊட்டிவிட்டாலும்
               வெண்ணைமட்டும்நீ விரும்பி உண்பதேனடா ?"
               அடிவிழாது என்றுகண்டுகொண்ட கண்ணனும்
               அன்னையுள்ளம் உருகுமாறு காரணம்சொல்கிறான் :


                                  "கோபியர்கள் `கருப்பா,கருப்பா!`'என்று கிண்டலாய்
                                     கூவியழைத்து என்னைரொம்பக்கேலி செய்யறா
                                   வெள்ளைவெண்ணையுண்டால் கருமைகரைந்துபோகுமே
                                  என்றுஎண்ணி வெண்ணைவிரும்பிஉண்டேன் "என்கிறான்
                  "கோபியரின்நீர்க்குடத்தை கல்லாலடித்து நீ
                   உடைத்ததாலே கோபங்கொண்டு கேலிசெய்கிறார்
                   போல்லாத்தனம்விட்டால் கருமைகரைந்துமறையுமே
                   வெண்ணையுண்ணத்தேவையில்லை"என்றுமறுக்கிறாள்


                                      கருமைக்காக தாய்தன்மேல் இறக்கம்காட்டுவாள்
                                      என்றுஎதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த
                                       மாயக்கண்ணன் தாயவளின் மனத்தை இளக்கிட
                                       மழலையாக மாயாஜால வார்த்தை மொழிகிறான்:

                     "`அன்னை'போல `வெண்ணை' இனிமையாக ஒலிப்பதால்
                      உன்னைப்போல வெண்ணைமீதும் பிரியம் அதிகமே "
                      யசோதை இதுகேட்டு வெண்ணையாய் உருகிவிடுகிறாள்
                      குட்டிக்கண்ணனைக்கட்டி அணைத்துமுத்தமிடுகிறாள்
=============================================================================================