சுமைதாங்கும் உமாபதி [மெட்டு..இசைத்தமிழ் நீ செய்த ...]
-------------------------------------------------------------------------------------
ஆதிரையான் ஒரு சுமைதாங்கி,
பாதிபாகம் அவன் உமைதாங்கி...[ஆதிரையான்..]
நதிசுமப்பான் சடைமுடிதனிலே,
சதிசுமப்பான் இடப்பாகத்திலே,
மதிசுமப்பான் திருச்சிரத்தினிலே,
தீசுமப்பான் திருக்கரத்தினிலே...[ஆதிரையான்..]
புரமெரிக்க வில்லாய் மலைதனைத்தாங்கியவன்
பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி வாங்கியவன் .
கண்டத்திலே விடத்தை சுமக்கும் சதாசிவன் .
தொண்டர் மனச்சுமையால் தளராமல் தாங்குபவன்,..[ஆதிரையான்..]
=========================================================================
No comments:
Post a Comment