போற்றிசாயிராம் [மெட்டு-சுத்தப்ரம்ம ....]
====================
சீரடிதனிலே உதித்தவராம்
சீறடியால் உலகாள்பவராம்
தீராவினைகளைத் தீர்ப்பவராம்
பாரோர் போற்றும் ஸ்ரீஸாயிராம்
[ஜயஜய போற்றி ஸ்ரீஸாயிராம்,
ஜயஜய போற்றி ஸ்ரீஸாயிராம்
ஜயஜய போற்றி ஸ்ரீஸாயிராம்
ஜயஜய போற்றி ஸ்ரீஸாயிராம் ]
தீயரைத்தீயாய் எரிப்பவராம்
தூயரின் முன்வினை அறுப்பவராம்
நேயரின் நண்பனாய் இருப்பவராம்
சேயெனநம்மைக்காப்பவராம் [ஜயஜய.....ஸ்ரீஸாயிராம் ]
உத்தம அன்பர்க்கு அருள்பவராம்
பக்தர்க்கு முக்தியைத்தருபவராம்
நித்தியராம்-அவர் நிர்மலராம்
சத்தியராம் சீரடி சாயிராம் [ஜயஜய...ஸ்ரீஸாயிராம் ]
============================================================
Saturday, October 30, 2010
சாயிநாம மகிமை
========================
துயரங்கள் தீர்க்கும் ஸ்ரீசாயிநாமம்
பவபயம் போக்கும் ஸ்ரீசாயிநாமம்
[துதிப்போம் சாயிபதம் ..நெஞ்சினில்
பதிப்போம் சாயிநாமம் ]
தூயரைக்காக்கும் ஸ்ரீசாயிநாமம்
தீயரைத்தாக்கும் ஸ்ரீசாயிநாமம்
[துதிப்போம்--------------------]
மனமலம் நீக்கும் ஸ்ரீசாயிநாமம்
மனபலம் சேர்க்கும் ஸ்ரீசாயிநாமம்
[துதிப்போம் .............................]
அஞ்ஞானம் அழிக்கும் ஸ்ரீசாயிநாமம்
மெய்ஞானம் அளிக்கும் ஸ்ரீசாயிநாமம்
[துதிப்போம் .............................]
இனம், மதம்,ஜாதி, மொழி எனும்பேதம்
அனைத்தையும் கடந்தது சாயிநாமம்
[துதிப்போம் ]
================================================

ஜெய் ஸ்ரீஸாயிராம்-- 108
=====================
தூய அன்பில் தோய்த்துச் சொல்லு ..ஜெயஸ்ரீசாயிராம்,
ஜெய்ஸ்ரீஸாயிராம்,ஜெய்ஸ்ரீஸாயிராம்,ஜெய்ஸ்ரீஸாயிராம்,ஜெய்ஸ்ரீஸாயிராம்
ஜன்மம் கடைதேரச்சொல்லு ஜெயஸ்ரீசாயிராம்
துன்பம்யாவும் தொலையச்சொல்லு ஜெய் ஸ்ரீஸாயிராம்
ஜெய்ஸ்ரீஸாயிராம்,ஜெய்ஸ்ரீசாய்ராம்,ஜெய்ஸ்ரீஸாயிராம் ,
ஜெய்ஸ்ரீஸாயிராம்,ஜெயஸ்ரீசாயிராம் [தூய---ஜெய்ஸ்ரீஸாயிராம் ]
வாயிருக்கும்வரையில் சொல்லு ஜெய் ஸ்ரீஸாயிராம்
ஓயும்வரையில் ஓங்கிச்சொல்லு ஜெய் ஸ்ரீஸாயிராம்
ஜெய் ஸ்ரீஸாயிராம் ------------------------------------------------
----------------------------------------------------[5 ]----[தூய-----]

முன்னை வினைகள் முறியச்சொல்லு ஜெய்ஸ்ரீஸாயிராம்
தன்னையே நீமறந்து சொல்லு ஜெய்ஸ்ரீஸாயிராம்
ஜெயஸ்ரீசாயிராம் ---------------------------------------------------[5 ]----[தூய------]
ஆயுள்முழுதும் அன்பாயச்சொல்லு ஜெய்ஸ்ரீஸாயிராம்
நேயமாய் நெக்குருகிச்சொல்லு ஜெய்ஸ்ரீஸாயிராம்
ஜெய்ஸ்ரீஸாயிராம் -----------------------------------------------[5 ]--[தூய-----]
பாவம் யாவும்போகச் சொல்லு ஜெய்ஸ்ரீஸாயிராம்
புண்ணியங்கள் சேரச் சொல்லு ஜெய்ஸ்ரீஸாயிராம்
ஜெய்ஸ்ரீஸாயிராம் -----------------------------------------------[5 ]--தூய--- ]
ஆசையாய் அனுதினமும் சொல்லு ஜெய்ஸ்ரீஸாயிராம்
பாசம் பொங்கி பெருகச் சொல்லு ஜெய்ஸ்ரீஸாயிராம்
ஜெயஸ்ரீசாயிராம் -------------------------------------------------[5 ]--தூய-----]
மரணபயம் மாயச் சொல்லு ஜெய்ஸ்ரீஸாயிராம்
கருணாமூர்த்தி பேரைச் சொல்லு ஜெயஸ்ரீசாயிராம்
ஜெய்ஸ்ரீஸாயிராம் ----------------------------------------------[5 ]--தூய------]
எங்குமின்பம் பெருகச் சொல்லு ஜெய்ஸ்ரீஸாயிராம்
பொங்கும் மங்களம் தங்கச் சொல்லு ஜெய்ஸ்ரீஸாயிராம்
ஜெயஸ்ரீசாயிராம் -------------------------------------------------[5 ]----தூய----]
தோததிரமாய் தொடர்ந்து சொல்லு ஜெய்ஸ்ரீஸாயிராம்
நாத்தழும்பு ஏறச் சொல்லு ஜெய்ஸ்ரீஸாயிராம்
ஜெய்ஸ்ரீஸாயிராம் ----------------------------------------------[5 ]-----தூய ----]
================================================================================
Thursday, October 28, 2010
ஸ்ரீசாயிநாதா சரணம்
======================
கங்கைதீர்த்தம்போல பரமபவித்ரம் ஸ்ரீசாயிநாதன்பாதம்
செங்கரும்புபோல இனிக்கும் அமிர்தம் ஸ்ரீசாயிநாதன்நாமம்
தஞ்சம் என்றோர்க்கு அஞ்சேல் என்றருளும் ஸ்ரீசாயிநாதன்பாதம் வஞ்சம் நிறைந்த நெஞ்சோரைமாற்றும் ஸ்ரீசாயிநாதன் நாமம்
ஜனனமரணபயத்தினை மாய்க்கும் ஸ்ரீசாயிநாமஸ்மரணம்
ஸ்ரீசாயிநாதா!ஸ்ரீசாயிநாதா!ஸ்ரீசாயிநாதா!சரணம் j
எங்கெங்குமின்பம் பொங்கிடவைக்கும் ஸ்ரீசாயிநாம ஸ்மரணம்
மங்காமகிழ்ச்சி மனத்தில் நிறைக்கும் ஸ்ரீசாயிநாம ஸ்மரணம்
இரும்புமனமும் இளகிடவைக்கும் ஸ்ரீசாயிநாம ஸ்மரணம்
ஸ்ரீசாயிநாதா!ஸ்ரீசாயிநாதா!ஸ்ரீசாயிநாதா!சரணம்
சங்கடங்கள் தீர்க்கும் ,சஞ்சலங்கள் போக்கும் ஸ்ரீசாயிநாம ஸ்மரணம்
மங்களம்எங்கும் தங்கிடவைக்கும் ஸ்ரீசாயிநாம ஸ்மரணம்
மனமலங்கள் போக்கி குணநலன்கள் சேர்க்கும் ஸ்ரீசாயிநாமஸ்மரணம்
ஸ்ரீசாயிநாதா!ஸ்ரீசாயிநாதா!ஸ்ரீசாயிநாதா!சரணம்
=================================================================================

சாயியைச்சரண் அடைவோம்
=================================== கலியுக இருளிடை வழிகாட்டும்
கலங்கரை விளக்கமாய் அவதரித்தே
குவலயம் எங்கும் ஆன்மிகம்
பரப்பிய சாயியைச் சரணடைவோம்
அங்கியணிந்த பக்கிரியாய்
ஷீரடியில் சீரடி பதித்தே
உலகோர்க்கெல்லாம் ஞான ஒளி
ஊட்டிய சாயியைச்சரண் அடைவோம்
ஒருபுறம் இனிக்கும் இலைகளுடன்
மறுபுறம் கசந்திடும் இலையுடைய
அதிசய வேப்பமரத்தடியில்
தோன்றிய சாயியைச் சரணடைவோம்
படுத்திட கோணிப்பை விரித்து
தலையணையாய் செங்கல் வைத்து
இடிந்தமசூதியில் துயிலிருந்த
எளியராம் சாயியைச் சரணடைவோம்
தூனிஎனும் தீக்குண்டந்தனை
அணையாமல் பேணிக்காத்திருந்தே
உதியினை பக்தர்க்கு உவந்தளித்த
உத்தமர் சாயியைச் சரணடைவோம்
திருகையில் கோதுமை மாவரைத்து
ஊரின் எல்லையில் தூவவைத்து
விடநோய் பரவாமல் தடுத்த
கடவுளாம் சாயியைச் சரணடைவோம்
================================================================

பாபாவைப்போற்றுவோம் [மெட்டு]-ராஜாவின்பார்வை.....
========================================================================================================
பாபாவைப்போற்றிப்பாடிடு நித்தம்
மனமாகிடும் சுத்தம்
தெளிவாகிடும் சித்தம்
தொலைந்தோடிடும் துக்கம்
வாழ்வாகிடும் சொர்க்கம்
இடிந்தமசூதியை இருப்பிடமாக்கி
புனிதப்படுத்திய பாவனபாபா
பக்கிரிபோல் பழங்கோணியில் படுத்த
சொக்கத்தங்கமாம் சத்குருபாபா
சீரடிபாபா
ஸ்ரீசாயிபாபா [பாபாவைப்போற்றி....]
எண்ணைதர மறுத்த ஈனரைத்திருத்த
தண்ணீரால் தீபம் ஏற்றிய பாபா
திருகையால் அரைத்த மாவினைத்தூவி
விடநோய் விறட்டிய வைத்தியர் பாபா
சீரடிபாபா
ஸ்ரீசாயிபாபா [பாபாவைப்போற்றி....]
அனைவர்க்கும் மேலே ஒருவனே என்று
உணர்த்தி மதபேதம் ஒழித்தவர் பாபா
தேவை 'ச்ரத்தையும் பொறுமையும்' என்று
உபதேசித்த உத்தமர் பாபா
சீரடிபாபா
ஸ்ரீசாயிபாபா [பாபாவைபோற்றி...]
===============================================================================

Wednesday, October 27, 2010
முழுமுதற்கடவுளே (மெட்டு -ஹிந்திப்பாட்டு -बीतिना बिताए रेना )
==========================================
முழுமுதற்கடவுளே ! மூஷிகவாஹனா!
தொழுவோர்க்கருளும் தேவா! கஜானனா!
பெற்றோரை நீசுற்றிவந்து பெற்ற ஞானக்கனியால்
பெற்றது தென்னாடு கந்தன் என்ற பெரும்பேறு
வஞ்சி அஞ்சி வேலனைத்தஞ்சம் அடைந்து
மணம்கொள்ள வைக்க வேழமாய் வந்துதவிய (முழு......)
கயிலை செல்லச்சேரன் கூப்பிட்டபோது
''கணேசனைப்பூஜித்தபின் கயிலை'' என்றுரைத்த
ஔவையின் அகவலால் மகிழ்ந்து துதிக்கையால்
ஒருகணத்தில் அவளை கயிலையில் சேர்த்த (முழு....)
=====================================================================

Thursday, October 21, 2010
ஐங்கரனின் பதம்பணிவோம் (மெட்டு - ஸ்ரீகணநாத)
1)பூங்கணை ஐந்தும் கரும்புச்சிலையும்
தாங்குந்தாய் அபிராமி தனயன்
ஐங்கரனின் பதம்பணிவோம்
சங்கரனின் செல்லபிள்ளையாம்ஐங்கரனின் பதம்பணிவோம்
2)லம்போதரன் ,குகசொதரன்
உம்பரும் வணங்கும் விக்னேஸ்வரன்
தும்பிக்கையான் தாள்தொழுவோம்
கொம்பால் மகாபாரதம் எழுதிய
தும்பிக்கையான் தாள்தொழுவோம்
3)நாரணன் கைச்சக்கரம் விழுங்கி
தோர்பிக்கரணம் போடவைத்த
வாரணா நனனை வழிபடுவோம்
பூரணகொழுகட்டைபிரியன்
வாரணா நனனை வழிபடுவோம்
Tuesday, October 19, 2010
அம்மனை அலங்கரிப்போம் (மெட்டு- ஹிந்திப்பாட்டு -குங்குரூகிதராஹ் )
அம்மன்மேனியை நாம் அழகாய் அலங்காரம் செய்வோம்
நவராத்திரியில் தாயை சிங்காரம் செய்வோம்
மூன்றுநாள் துர்க்கையாய் , மூன்றுநாள் லக்ஷ்மியாய்
மூன்றுநாள் சரஸ்வதியாய் துதித்திடுவோம் ( அம்மன்மேனியை....)
1 ) செங்கரும்புவில்லும் பூங்கணைகள் ஐந்தும்
அங்குசபாசமும் தாங்கும் மங்கையவள்
சங்கரன்மேனியில் ஒருபங்கானவள்
சங்குசக்கரபாணி யின் தங்கையாம்..(அம்மன்மேனியை ...)
2 ) பக்தன்சொன்ன சொல்லை மெய்யாக்கிடவே
தன் தாடங்கத்தை விண்ணில் விட்டெறிந்தே
அம்மாவாசைவானில் முழுநிலா காட்டிய
அன்னை அபிராமவல்லியின் அருள்பெறவே ..(அம்மன்மேனியை...)
3 ) அன்னபூரணியாம் அவள்காசியிலே
கற்பகாம்பிகையாம் அவள் மயிலையிலே
மதுரைமீனாக்ஷியாய் காஞ்சிகாமாக்ஷியாய்
நாகைநீலாயதாக்ஷியாய் அருள்புரியும் ...(அம்மன்மேனியை...)
Sunday, October 17, 2010
தரிசனம்
அம்பா காமாட்சி உன் குமிழ்வாயில் குறுநகை
தரிசனம் கனவுதானோ ?
செம்பவழக்குவியலில் முத்தும் முகிழ்ந்ததோ?
விந்தையோ?உண்மைதானோ?
குங்குமப்பூங்கோத்தில் தும்பையும் பூத்ததோ?
கற்பனைக்கொலந்தானோ?
மங்களசெவ்வாயில் திங்கள் உதித்ததோ?
மந்திரஜாலந்தானோ?
நின்கரம் ஒன்றிலே கரும்பேந்தி இனிமையைக் கரும்பிலே கூட்டிவைத்தாய்
மென்கரம் ஒன்றிலே மலரேந்தி மென்மையைமலர்களில் ஏற்றிவைத்தாய்
உன்சிரம் தாங்கிடும் வெண்ணிலாதன்னில் உன் தண்ணொளி தேக்கிவைத்தாய்
என்மனப்பிதற்றல் உன் பொற்பதம் தொட்டதும் பாடலாய் ஆக்கிவைத்தாய்
அம்மன் பாட்டு (மெட்டு-அத்தை மடி மெத்தையடி )
பொம்மைகொலு வைத்திடுவோம் அம்மனை அழைத்திடுவோம்
தேமதுர தமிழினிலே பாமாலை சூட்டிடுவோம்
நம்மதாயே...துர்கா,லக்ஷ்மி,சரஸ்வதியாக வந்திடுவாள்
நமக்கெல்லாம்...வீரம்,செல்வம்,ஞானம் யாவும் தந்திடுவாள்
1) மூன்றிரவு துர்காதேவியாக்கி
சிங்கத்திலவளை ஏற்றிவைப்போம்
துஷ்டரை வெல்லும் திறம்தருவாள்
2)மூன்றிரவு மகாலக்ஷ்மியாக்கி
தாமரைபூவினில் ஏற்றிவைப்போம்
பொருள்வளம் பொங்க அருள்புரிவாள்
அள்ளிதரும்வள்ளல் ஆக்கிடுவாள்.. நம்மை
அள்ளித்தரும் வள்ளலாக்கிடுவாள்
3)மூன்றிரவு கையில் வீணைதந்து
அன்னையை சரச்வதியாக்கிடுவோம்
வித்யையும் வினயமும் ஊட்டிடுவாள்
பக்குவஞானியாய் ஆக்கிடுவாள் ..நம்மை
பக்குவஞானியாய் ஆக்கிடுவாள்
தேமதுர தமிழினிலே பாமாலை சூட்டிடுவோம்
நம்மதாயே...துர்கா,லக்ஷ்மி,சரஸ்வதியாக வந்திடுவாள்
நமக்கெல்லாம்...வீரம்,செல்வம்,ஞானம் யாவும் தந்திடுவாள்
1) மூன்றிரவு துர்காதேவியாக்கி
சிங்கத்திலவளை ஏற்றிவைப்போம்
துஷ்டரை வெல்லும் திறம்தருவாள்
தாயாய் அவள்நம்மை காத்திடுவாள்...பெற்ற
தாயாய் அவள்நம்மை காத்திடுவாள் 2)மூன்றிரவு மகாலக்ஷ்மியாக்கி
தாமரைபூவினில் ஏற்றிவைப்போம்
பொருள்வளம் பொங்க அருள்புரிவாள்
அள்ளிதரும்வள்ளல் ஆக்கிடுவாள்.. நம்மை
அள்ளித்தரும் வள்ளலாக்கிடுவாள்
3)மூன்றிரவு கையில் வீணைதந்து
அன்னையை சரச்வதியாக்கிடுவோம்
வித்யையும் வினயமும் ஊட்டிடுவாள்
பக்குவஞானியாய் ஆக்கிடுவாள் ..நம்மை
பக்குவஞானியாய் ஆக்கிடுவாள்
Subscribe to:
Posts (Atom)