விண்ணோரும் தொழும் பன்னிருகண்ணனின்
சன்னதியை நாடு ,--அவன்
புண்ணிய நாமத்தை எண்ணி இனியதோர்
பண்ணமைத்தே பாடு !
[சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் ஷடானனா!
சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் சிவனந்தனா ]
உருகியுருகி மனமுருகியுருகி திரு
முருகனின் பேரோது,-அவன் அருகில் வரவும் அருள்பெருகிவரவுமதைப்
பருகிமகிழ்ந்தாடு !
[சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் ஷடானனா!
சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் சிவனந்தனா ]
பவபயம்போக்கி நோய்நொடி நீக்கும்
ஔஷதஎழுத்தாறு ,--ஓங்கி
``சரவணபவனுக்கு அரோஹரா!'' என்றே
பரவசமாய்க் கூறு !
[சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் ஷடானனா!
சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் சிவனந்தனா ]
வினைப்பயன் தீர்க்க முனைவேலேந்தி
வருகிறான் வேல்முருகன் ,--நம்ம
பயந்தனைப்போக்க மயில்மீதேறி
வருகிறான் மால்மருகன் !
[சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் ஷடானனா!
சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் சிவனந்தனா!]
தேவயானியுடன் பாவைவள்ளியுடன்
வருகிறான் ஆறுமுகன்,--தீய
ஏவல் வினையறுக்கும் காவல்தெய்வமாய்
வருகிறான் குருகுகன் !
[சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் ஷடானனா!
சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் சிவனந்தனா!]
வினைப்பயன் தீர்க்க முனைவேலேந்தி
ReplyDeleteவருகிறான் வேல்முருகன் ,--நம்ம
பயந்தனைப்போக்க மயில்மீதேறி
வருகிறான் மால்மருகன் !
உண்மை அவன் கால் பட்டு அழிந்தது என் தலைமேல் ஐயன் கைஎழுத்தே!
i sang this krithigai geetham in Raag bhoopalam
ReplyDeleteOm Saravana bhava Om Shadanana !!
you will see this soon in my blog
http://kandhanaithuthi.blogspot.com