கோகுல மண்ணள்ளித் தின்னவன்;--கொஞ்சும்
கோபியருடன் லீலை பண்ணவன்;
ராதையின் நெஞ்சத்து மன்னவன்;--பக்த
மீராவுக்கும் அவன் 'தன்னவன்'!
உன்னவன் ..அவன் என்னவன் ..நம்ம
எல்லோருக்கும் 'உயிர்' அன்னவன்!
பாரதி பாட்டிலோர் பெண்ணவன்;--பாவை
பாடிய கோதையின் க(ண்)ணவன்;
கீதை எனும் வேதம் சொன்னவன்;--ஸ்ரீ
ரங்கம் துயின்றதால் தென்னவன்!
உன்னவன் ..அவன் என்னவன் ..நம்ம
எல்லோருக்கும் 'உயிர்' அன்னவன்!
ராமாவதாரத்துப் பின்னவன்;--திரு
மாலாய் சங்கரிக்கு முன்னவன்;
பலராமனுக்குச் சின்னவன்;--ஓங்கி
உலகையளந்து நின்னவன்!
உன்னவன் ..அவன் என்னவன் ..நம்ம
எல்லோருக்கும் 'உயிர்' அன்னவன்!
உங்கள் குரலா இது மேடம்? ராதையின் குரலாய்,தேனாய் இனிக்கிறது .
ReplyDeleteஎனக்கும் இந்த ராகத்தில் ஒரு பாடல் எழுத வேண்டும் ஆசை பிறந்திருக்கிறது.
சிவகுமாரன்,
ReplyDeleteதிருமதி கலா அவர்களின் குரல்தான் அவ்வளவு இனிமையாக ஒலிக்கிறது!
பாடுவது நானல்ல!
திருமதி கலா மேடம் அவர்களுக்கு என் வணக்கத்தை தெரிவியுங்கள். இந்தச் சிறியேனை ஆச்சீர்வதிக்கச் சொல்லுங்கள்.
ReplyDeletelalitha
ReplyDeleteIts a pleasure to give life to your lyrics through my tunes.
Happy to note that Mr.sivakumaran likes it.Thanks.
My best wishes
Very nice Lalitha and Srikala.
ReplyDelete