Saturday, April 30, 2011

லிங்காஷ்டகம்

                                     லிங்காஷ்டகம்    
                                        [ மெட்டு-பிரம்ம முராரி 

                                            
அரி அயன் அனைவரும் பணிந்திடும் லிங்கம்;
திருபுரம் எரித்த தயாபர லிங்கம்;
பிறவிப்பிணி தனை அறுத்திடும்லிங்கம்;
தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.

          இஷ்டமாய் தூயர்கள் சேவிக்கும்லிங்கம்;
         பஸ்மமாய் காமனைப்பொசுக்கியலிங்கம்;
        துஷ்டதசமுகனும் வணங்கியலிங்கம்;
         தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.

சுகந்தங்கள் சூழ்ந்ததோர் சுந்தரலிங்கம்;
அகத்தின் அழுக்கினை அகற்றிடும்லிங்கம்;
சகலரும் சரணம் அடைந்திடும் லிங்கம்;
தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.

          உச்சியில் வளர்மதி சூடியலிங்கம்;
         நச்சுடைநாகம் அணைத்திடும்லிங்கம்;
        தக்ஷயஞம் தடுத்தருளியலிங்கம்;
        தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.

குங்குமசந்தனம் பூசியலிங்கம்;
செங்கமலமாலை சூடியலிங்கம்;
முந்தையபாவங்கள் முறித்திடும்லிங்கம்;
தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.

            தேவரும் யாவரும் துதித்திடும் லிங்கம்;  
           சேவிக்கும் அன்பர்க்கு சுகந்தரும் லிங்கம்;
           காவியம் கொள்ளா கவின்மிகு லிங்கம்;
          தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.

வில்வதளார்ச்சனை  விரும்பிடும் லிங்கம்;
நல்லவை யாவுக்கும் காரண லிங்கம்;
செல்வச்செழிப்பினை சேர்த்திடும் லிங்கம்;
தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.

        முனிவர்,சுரஅசுரர் பூஜிக்கும்லிங்கம்;
        மணமலர் மாரியில் மறைந்திடும்லிங்கம்;
       மனத்தினில் பக்தியைத்தூண்டிடும் லிங்கம்;
       தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.
      தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.
      தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.

2 comments:

  1. பொருள் தெரியாமல் பாடும் போது கிடைக்கும் இன்பத்தைக் காட்டிலும் பன்மடங்கு இன்பம் இந்தப் பாட்டில். மிக்க நன்றி மேடம்.
    நான் லிங்காஷ்டகம் மெட்டில் நமசிவாய போற்றி எழுதி இருக்கிறேன்.
    விரைவில் வெளியிடுகிறேன்.

    ReplyDelete
  2. Lalitha, you could have given the last line " Thath Pranamaami Sadhaasiva Lingam" in thamizh, I feel.

    ReplyDelete