Tuesday, April 12, 2011

ஸாயிராம் நவமி

        ஸாயிராம் நவமி

          
        ராமநவமிநாளில் சாயிநாமம் ஓதுவோம்;             
        தாமரைப்பதத்தில் பஜனைமலர்கள் தூவுவோம் 


                 கொடிய அரக்கர்கோனை கொன்ற கோதண்டபாணி;
                    கலியுகத்தில் பூண்டநாமம் சீரடிசாயி .                              
                     அரவப்படுக்கை விடுத்து கிழிந்த கந்தல் கோணி ;       
          விரித்து அரி துயின்றதலம் த்வாரகாமாயி.             
                                                                           
[ராமநவமி]

        கல்லாய் உரைந்த அகல்யாவை மீட்டவர் ரகுராம்;
                       செங்கல்லில் தன் உயிரை அடக்கி வைத்தவர் சாயிராம்.
       சபரி ருசித்த பழத்தை உண்டு ரசித்தவர் ரகுராம் ;
                       பாயாஜாபாய் அளித்த  உணவைப் புசித்தவர் ஸாயிராம்.          
[ராமநவமி]



                       அயோத்தி வருமுன் பதினான்காண்டு ராமரின்வனவாசம்;
                       சீரடிதிரும்புமுன் நான்காண்டு சாயியின் அக்ஞாத வாசம்.
   வெற்றிகரமாய் முடித்தார் ராமர் அச்வமேதயாகம்; 
           மீட்டுத்தந்தார் ஸாயிநாதர்  சந்த்படீலின் அச்வம்.
                                                       [ராமநவமி...]
                                                           
                              

        வில்வித்தை பயின்று தேர்ச்சி பெற்றவர் ரகுராம்;
        மல்யுத்தக்கலையில் பயிற்சி பெற்றவர் சாயிராம்.
       அம்பினாலே அரக்கர்கோனை அழித்தவர் ரகுராம்;
           அன்பால் ரோஹிலாவையடக்கியவர் ஸாயிராம்.
[ராமநவமி]
                          

                     இனம்,மதம், மொழி பேதமற்ற சாயி மனிதமேரு;                 
                     துனியிலிருந்து அவரளித்த உதியோ புனிதநீறு;                     
                     கண்கண்டகடவுள் சாயி நமது கல்பத்தரு ;                           
                     மீண்டும்மீண்டும் படித்து உய்வோம் சாயிவரலாறு.            [ராமநவமி-]

              பிக்ஷை வாங்கி பகிர்ந்துண்டவர்  நாமம் சாயிராம்      
       ரக்ஷையாக நம்மைக்காக்கும் நாமம் சாயிராம்       
      அக்ஷயபாத்திரமாய் அருளும் நாமம் சாயிராம்      
        மோக்ஷமளிக்கும்  மூலமந்த்ரம்  ஒம்ஸ்ரீசாயிராம்       
                                                                              ஒம்ஸ்ரீசாயிராம்         
                                                                                                ஒம்ஸ்ரீசாயிராம்    



disclaimer:images are from 'google search'                        

No comments:

Post a Comment