Thursday, April 14, 2011

சித்திரை பூத்தது


         சித்திரை பூத்தது


சித்திரை பூத்ததும் சித்தத்தில் பூத்ததோர்
புத்தம் புதிய சந்தம் ...இனிய
இசை அமைத்தே இதைப்பாடிப்பணிவோம்
இறைவன் பாதாரவிந்தம் ..[மங்களம் பொங்கிடும்
                                                             எங்கெங்கும் தங்கிடும் ]



                    ஸ்கந்தபூர்வஜனாம் தொந்தி கணேசனை
                   வந்தனை செய்திடுவோம் ..அவன்
                   ஐந்துகரத்தாலே  அபயம் அளித்தாசி
                   தந்தருள் புரிந்திடுவான் ..[மங்களம்...]




தனயனிடம் பாடங்கற்ற பரமனின்
வினயத்தைப்பாடிடுவோம் --கையில்
கனலேந்தும் கயிலாயன் குண நலன்கூட்டி  நம்
மனமலம் மாய்த்திடுவான்--(மங்களம்..)





                குகனுக்கு சக்திவேல் தந்த அபிராமி
               மகிமையைப்பாடிடுவோம் --அன்னை
               அகிலாண்டேஸ்வரி  அடியவர்வாழ்வினை
              சுகமயமாக்கிடுவாள் (மங்களம்...)





தோகைமயிலேறி வேகமாய்வரும்
விசாகனைப்பாடிடுவோம் --கருணை
மேகமாய் வந்தருள்மழைபொழிந்தே  அவன்
தேகனலந்தருவான் (மங்களம்..)


      



                   வேலினை ஏந்தும் விசாகனின்மாமனாம்
                   மாலினைப் பாடிடுவோம் --சிறு
                   கால்விரல்கடித்திடும்   ஆலிலைப் பாலகன்
                  காலமெல்லாம் அருள்வான் (மங்களம்)




 முருகன் மாமன் மார்பில் உரையுந்திருமகள்
பெருமையைப் பாடிடுவோம் --அவள்
பொருள்வளம் அளித்து நம் வறுமையைப் போக்கியே
திருவருள் செய்திடுவாள் (மங்களம்--)


                   நான்முகன் நாயகி வீணாபாணியின்
                   மேன்மையை ப்பாடிடுவோம் --கலை
                   வாணி நம் அஞான இருளினைப் போக்கியே
                    ஞான ஒளி   அருள்வாள் (மங்களம்...)


Disclaimer:images are from 'google search'

2 comments:

  1. a very happy Tamil New Year Madam.
    I am singing ( or perhaps trying to sing ) in Raag chenchuritti.
    You may listen to this in my blog
    http://menakasury.blogspot.com
    of course after an hour or so.

    ReplyDelete
  2. subbu sir,
    wish u and yr family members 'very happy thamizh new year'
    thanks a lot for singing my song in yr blog .it was not only nice to hear but also sounded so easy to sing even for people like me having no 'paattu gnaanam'

    "mangalam ponguga!
    engengum thanguga!!"

    ReplyDelete