கண்டேன் கண்ணனை![மெட்டு-ஆடுவோமே,பள்ளுபாடுவோமே]
======================
[டிவி யில் பிரளயம் வரப்போவதாக பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்;பிரளயம்
வந்தபோது ஆலிலையில் கட்டைவிரல் சப்பும் கண்ணன் தெரிந்தான் என்று படித்தது நினைவுக்கு வந்தது!மனத்தில் ஒரு பெரிய ஆங்க்ஸயிடி எழுந்தநேரம் மனத்தை டைவர்ட்
பண்ணுவதற்காக எழுதிய பாட்டு கீழே!]
பாடுவேனே,மகிழ்ந்தாடுவேனே,
ஆலிலைப் பாலனைக் கண்ட ஆனந்தத்தில் .[பாடுவேனே]
பிரளயம் வருமென்று பலர் கூறினார்;
அழியும் உலகம் என்று பயங்காட்டினார்;
ஆலிலையில் அவன் தெரிவானென்று
ஆவலாய் தரிசிக்கக் காத்திருந்தேன்.[பாடுவேனே]
மனத்தில் எழுந்ததோர் மகாப்ரளயம்;
"முடிந்ததுன் கதை"என்றதென்னிதயம்;
பாட்டென்னும் ......இந்தப்பாட்டென்னும்
பாட்டென்னும் ஆலிலையில் அவன் தோன்றினான்!
கால்விரலைக் கடித்தபடி எனைத்தீண்டினான்!
" முடிந்ததா உன் கதை?"என்று எனைச் சீண்டினான்!
பாட்டாய் இதைப்பாட எனைத்தூண்டினான்![பாடுவேனே]
===========================================================

ச்வீட்டான பாடல் அம்மா :)
ReplyDeletecho.. sweet.. :)
ReplyDeletekavinaya,sankar,
ReplyDeletethanks for visiting.
pl also go through the AMBAAL NADAGAM and
SANKARARIN SLEDAI in my blog[in periyavaa's
simple words]where you can have a taste of
SANKARA's depth of bakthi, gnaanam besides his poetic skill[specially meant for upcoming poets
like you]