Friday, February 4, 2011

அம்பாள் நாடகம் [ர.கணபதி யின் தெய்வத்தின் குரலிலிருந்து ..சுருக்கம்]
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
                                       சௌந்தர்யலஹரி [66 ]
   விபஞ்ச்யா காயந்தி  விவித மபதானம் பசுபதே:
   த்வயா-[ஆ]ரப்தே வக்தும்  சலித சிரசா  சாது-வசனே
   ததீயைர்-மாதுர்யை-ரபலபித -தந்த்ரீ கலரவாம்
   நிஜாம் வீணாம் வாணி நிசுலயதி சோலேன நிப்ருதம்:

         இந்த வரிகளில் ஆசார்யாள் ஒரு சின்ன நாடகமே போட்டுக் காட்டி
   விடுகிறார்! இந்த நாடகம் அம்பாளுடைய சதஸில் நடக்கிறது;அம்பாள்
   கச்சேரி கேட்டுண்டு ஆனந்தமா உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்;சாக்ஷாத்
   சரஸ்வதிதான் வீணாகானம் பண்ணுகிறாள் .

           விபஞ்ச்யாகாயந்தி=வீணை வாசித்துக்கொண்டு கூடவே பாடுகிற
          விவிதம் அபதானம் பசுபதே:=சிவனின் விதவிதமான உத்தம      
          சரித்திரங்களை

      அதாவது சிவனின் சிறப்பு பொருந்திய விருத்தாந்தங்களை சரஸ்வதி
வீணையில் வாசிக்கிறாள்.பதிவ்ருதா ரத்னமான அம்பாளுக்கு அதுதான்
பிடிக்கும்;அம்பாள் மனசு சரஸ்வதிக்குத் தெரியும்.

     த்வயா==உன்னால் [அம்பிகையால்]
    வக்தும்  ஆரப்தே=சொல்ல ஆரம்பிக்கப்பட்ட போது
    சலித சிரசா =தலையாட்டிக்கொண்டு 
    சாது வசனே=பாராட்டு மொழி 

      சங்கீதத்தில் சொக்கி லயித்திருந்த  அம்பாள் அவ்வப்போது தலையசைத்து 
ரசிக்கிறாள்[சலித சிரசா].தலையாட்டிக்கொண்டிருந்தவள் இரண்டு பாராட்டு மொழி [சபாஷ்] சொல்ல நினைத்து  சொல்ல ஆரம்பித்தாள்; முழுக்கக்கூடச்சொல்லவில்லை[ஆரப்தே].அம்பாள் பாராட்டு சொல்ல ஆரம்பித்த உடனே  என்ன நடந்தது?

 ததீயைர்=அதனுடைய [அம்பாள் சொல்ல ஆரம்பித்த வசனத்தினுடைய ]
மாதுர்யைர்=மாதுர்யத்தினால் 
அபலபித=அவமதிக்கப்பட்ட 
தந்த்ரீ =வீணைத்தந்திகளின் 
கலரவாம்=இனிய  ஒலியை 

       அதாவது,அம்பாள் சொல்ல ஆரம்பித்த வாக்கின் மாதுர்யத்தால்  தன்னுடைய வீணைத்தந்திகளின்இனிய ஒலி அவமதிக்கப்பட்டதை [சரஸ்வதி பார்த்து]

        இவளுடைய க்ஷணகாலப் பேச்சின் மதுரத்துக்கு முன்னால், சரஸ்வதியின் குரலும் வீணாகானத்தின்மதுரமும் இருந்த இடம் தெரியாமல் போனது!தான் தோற்றுப்போனத்தில்சரஸ்வதி பாடுவதை நிறுத்தித் தலை குனிந்தாள்;வீணை அவமதிக்கப்பட்டதற்கு என்ன செய்தாள்?

    நிஜாம்=தன்னுடைய
   வீணாம்=வீணையை
   வாணி=சரஸ்வதி
   நிசுலயதி=மூடுகிறாள்
   சோலேன=உறையினால்
   நிப்ருதம்=வெளியில் தெரியாதபடி மறைத்து

      அம்பாளுடைய கண்டத்திலிருந்து வந்த சுநாதத்துக்குத் தன் வீணா நாதம் "உறைபோடக் காணாது" என்று ஏற்றுக்கொண்டு வீணையை உறை போட்டு  மூடிவிட்டாள் சரஸ்வதி!

     தன் குரலிலேயே இத்தனை இனிமை இருந்தும் அம்பிகை சரஸ்வதியைப் பெருமைப் படுத்த நினைத்து  தலையாட்டி ரசித்ததோடல்லாமல் பாராட்டுச் சொல்ல ஆரம்பித்தாள்;ஆனால் அந்த குரலினிமை  அவளை  உத்சாகப்படுத்துவதர்க்கு மாறாக வெட்கித்தலை குனிய வைத்தது!இவள் தலை குனிந்தாள்;ஆனால் வீணை?அது தன் குடம் என்கிற தலையை விறைப்பாய் வைத்திண்டிருந்தது! ''தோற்றுப்போன வீணை மூஞ்சியை வெளியே காட்டப்படாது'' என்று நினைத்தவள் அதனுடைய உறையை நன்றாக இழுத்து மூடிவிட்டாள்.

       வாய்ப்பாட்டை நறுக்கென்று நிறுத்தமுடியும்;தந்தி நாதம் அப்படி இல்லையே ;அதற்க்கு அனுரணனம் என்று ஒன்று உண்டு;பழைய மீட்டின்
 டோய்ங்  அனுரணனமாக இழுத்துக்கொண்டே போயிருக்கும் ;அதனால்தான்
"வாயை மூடிக்கோ"என்கிறார்ப்போல் வீணையை உறையால் மூடிட்டாள்.

      அம்பாளுடைய குரலினிமையை உணர்ந்ததும் சரஸ்வதி இப்படி நினைத்திருக்கலாம்:"இப்பேர்ப்பட்ட நாதாம்ருதத்தைக் கண்டத்திலே கொண்ட அம்பாள் என் கானத்தை ரசித்திருக்கவே முடியாது.அவள் ஆனந்தப்பட்டு தலை அசைத்ததெல்லாம் ஈஸ்வர லீலா வைபவத்துக்காகவோ, சாஹித்ய விசேஷத்துக்காகவோதான்!நம் பாட்டை ரசிக்கிறாள் என்று அசடு மாதிரி  நினைத்து நான்பாட்டுக்கு  கானம் பண்ணிக்கொண்டே போனேனே "என்று சரச்வதிக்குத் தோன்றி இருக்கலாம் .இது அவமானத்தை இன்னும் ஜாஸ்தி யாக்கி இருக்கும்.
             
       மொத்தத்தில் ஸ்லோகம் ஒரு நாடகமாக இருக்கிறது: தேவி சந்நிதி;சரஸ்வதி வீணை வாசித்துப் பாடுவது;பரமேச்வரலீலைகள் கிருதிகளில் விரிவது;அம்பாள் சந்தோஷப்பட்டு தலையை அசைப்பது;வாய்விட்டு ஆஹாகாரம் பண்ணுவது;அதன் அலாதியான மாதுர்யம்;சரஸ்வதி வெட்கப்பட்டு தலை குனிவது;வீணையை இழுத்து மூடுவது  என்று ஸீன் ஸீனாகப் போகிறது .நம் மனத்துக்குள் போட்டுப் பார்த்துக் கொள்ளவேண்டிய நாடகம்!
-------------------------------------------------------------------------------------------------------------------------

  

2 comments:

  1. ஆஹா, சூப்பர் அம்மா. நீங்க சொன்ன மாதிரி படிக்கும் போதே மனசுக்குள் ஓடியது. சுகமாக இருந்தது :) பகிர்தலுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  2. Yes amma.. As I started imagining the scene, which you have narrated here. Everything goes beyond imagination amma.
    Here, I remember, the Ambal of Vedharanyam temple has the name of , "Yaazhai Pazhittha Mozhiyaal". Yevlo azhaga Sankarar anubavichu. Andha anubavatha nammalum anubavikka, konjamum rasam korayama vari vari koduthuukkar amma.
    Ungalukku yennoda namaskaram.

    ReplyDelete

Saying of the Day

There was an error in this gadget