கார்த்திகை பஜனைப்பாட்டு
(Subbusir sings:
http://www.youtube.com/watch?v=yUMK8rcZeDY&feature=player_embedded)
அகல் விளக்கு ஏற்றி வைத்தோம் ,அலைவாய் அழகா!
அஞ்ஞான இருள் அழிப்பாய் ,குன்றாடும் குழகா!
தினையுடன் தேன் உனக்களித்தோம் ,வனமாலிமருகா!
துணைவருவாய் ,வினையறுப்பாய்,முனைவேல்முருகா!
அலைவாய் அழகா!குன்றாடும் குழகா!
வனமாலிமருகா!முனைவேல்முருகா!
ஜகம்புகழும் சிவைமகனே!சுப்பிரமணியா!
தகப்பனுக்குப் பாடஞ்சொன்ன ஒப்பற்ற தனயா!
திகழாறு முகத்தானே!கார்த்திகேயா !
அகம் அமர்ந்து சுகமருள்வாய்,காங்கேயா!
சுப்பிரமணியா! ஒப்பற்ற தனயா!
கார்த்திகேயா !காங்கேயா!
குஞ்சிதபாதன்மைந்தா!குஞ்சரி காந்தா!
வஞ்சிநாதா!குறிஞ்சிவேந்தா!சண்முகசேந்தா!
சிந்தையிலுன் மந்திரமே,கந்தா!அனந்தா!
உந்தன் திருக்காட்சி தினம் காணும் வரம்தா!
குஞ்சரி காந்தா!சண்முகசேந்தா!
கந்தா!அனந்தா!காணும் வரம்தா!
உனைக்காணும் வரம் தா !
தினம் காணும் வரம் தா!
No comments:
Post a Comment