ஷண்முகனுக்கு ஷடாக்ஷரத்துதி
சக்தி புத்திரனை சித்தத்தில் நிறைப்போம் .
சதாசிவமகனின் திருத்துதி இசைப்போம் .
சண்முகன் நந்நாமம் நெஞ்சில் நினைப்போம் .
சகாரமுறை குகன் மந்திரம் உரைப்போம்.
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
ரத்தவர்ணனவன் திருப்பதம் தொழுவோம் .
ரங்கன் மருகனவன் திருப்பெயர் மொழிவோம் .
ரத்னவேலுடையோன் முன் கை குவிப்போம்.
ரகாரமுறை குகன் மந்திரம் ஜெபிப்போம் .
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
வள்ளிநாயகன் பதம் இதயத்தில் பதிப்போம்.
வரதாயகன் புகழ் பாடித் துதிப்போம்.
வடிவேலவன் நாமம் நாளெல்லாம் நவில்வோம்.
வகாரமுறை குகன் மந்திரம் பயில்வோம்.
சரவணபவ ஓம்சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம்சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
கணபதிக்கிளையோனின் வெண்ணீறு அணிவோம் .
குணக்குன்றாம் குமரனின் இணையடி பணிவோம்.
தணலாய் உதித்தோன் அருட்சுனையினில் நனைவோம் .
ணகாரமுறை குகன் மந்திரம் நவில்வோம் .
சரவணபவ ஓம்சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம்சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
பரமகுருவின் திருப்பொடி புனைந்திடுவோம்.
பன்னிருகண்ணனின் பதம் பரவிடுவோம்.
பக்தவத்சலனைப் பாடிப் போற்றிடுவோம்.
பகாரமுறைவோன் பேர் உருவேற்றிடுவோம்.
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
வண்ணமயில் வாகனனை வணங்கிடுவோம்.
வல்வினையறுப்போனை வழிபடுவோம்.
வள்ளலை வாழ்த்தித் துதி பாடிடுவோம்.
வகாரமுறைவோன் மந்திரம் ஓதிடுவோம்.
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
No comments:
Post a Comment