ஆறுமுகன் அருள்வான்!
(கீழுள்ள லிங்குகளில் சுப்பு ஐயாவும் மீனாம்மாவும்
' காவடிச்சிந்து 'பாடக்கேட்டு ரசிக்கலாம்!)
http://youtu.be/OB9A3Z4wlNU
OR
http://kandhanaithuthi.blogspot.com/
அன்னை அபிராமி தனயன்,-ஒற்றைத்
தந்தக்கணபதிக்கிளையோன் ,-கந்தன்
பொன்னடிபணிந்திடும் தன்னடியாருக்கு
பன்னிருகையாலே அருள்வான்,-பொங்கும்
இன்பத்தை எந்நாளும் பொழிவான் ;
அன்பாய் அருள்வான் ,இன்பம் பொழிவான்!
அன்பாய் அருள்வான் ,இன்பம் பொழிவான்!
கயிலாயரின்மகன் முருகன்,--வண்ண
மயிலிறகணிவோனின் மருகன்,--கந்தன்
பயபக்தியாய்வந்து பதமலர் பணிவோரின்
துயரங்கள் யாவையும் துடைப்பான் ,--சுக
மயமான வாழ்வினைக் கொடுப்பான்.
துயர் துடைப்பான்,சுகங்கொடுப்பான் ,
துயர் துடைப்பான்;சுகங்கொடுப்பான்!
இந்திரன்மகள் மனவாசன்--தூய
அன்புக்குறவள்ளி நேசன் --கந்தன்
சிந்தையிலே ஆறெழுத்து மந்திரம் ஜெபிப்போரின்
முந்தைவினைகளையறுப்பான் ,--பெற்ற
தந்தையெனத் துணை இருப்பான் ,
வினையறுப்பான்,துணை இருப்பான்,
வினையறுப்பான்,துணை இருப்பான் !
(சகிப்புத்தன்மையை பரிசோதித்துக் கொள்ள விரும்புவோர்
என் குரலிலும்பாட்டைக் கேட்கலாம் கீழே! )
Lalitha, good effort. Keep on singing :) Voice and lyrics romba clear-a iruku. (Do you agree now that I have sahippuththanmai?? :))) ) Sury sir songum ketten. They are giving life to your lyrics:) Keep it up:)
ReplyDelete