Tuesday, March 27, 2012

ஷண்முகா!சரணம்




( எதையும் தாங்கும் இதயமுள்ளவர்கள் என் குரலில் பாட்டைக்
   கேட்கலாம்!)

ஷண்முகா!சரணம்
       http://youtu.be/We9fKaM-YAM

( மேலுள்ள லிங்கில் சுப்பு ஐயா  அவர்கள் ஹம்சத்வனியில்
    பாடுவதை ரசித்தவண்ணம்  வாசிக்கவும்)

தும்பிக்கையான் திருத்தம்பியே,சரணம்.
அம்பிகைமைந்தா,அழகா,சரணம்.
சம்புகுமாரா,சண்முகா,சரணம்.
நம்பிராசன் திருமருகா,சரணம்.
நம்புவோர்க்கருளும் நாயகா,சரணம் .

கந்தா,...குமரா..... சரணம்...சரணம்.
கருணா...நிதியே... சரணம் ..சரணம் .
சரவணபவ ஓம்முருகா,சரணம் .

காத்யாயினி ப்ரியசுதனே ,சரணம்.
கூத்தபிரான் குருநாதா, சரணம் .
கார்த்திகைப் பெண்களின் செல்வா,சரணம் .
பார்த்தசாரதியின் மருகா,சரணம் .
காத்தருள்வாய்,கருணாகரா,சரணம்

கந்தா,...குமரா..... சரணம்...சரணம்.
கருணா...நிதியே... சரணம் ..சரணம் .
சரவணபவ ஓம்முருகா,சரணம்

சேவல் கொடியேந்தும் தேவா,சரணம்.
தேவர் படையின் தலைவா , சரணம் .
பாவைவள்ளி ப்ரியநாதா,சரணம்.
தேவயானி மணவாளா,சரணம்
 நாவில் உன் நாமம்  என்றும் இருக்கணும் . 

கந்தா,...குமரா..... சரணம்...சரணம்.
கருணா...நிதியே... சரணம் ..சரணம் .
சரவணபவ ஓம்முருகா,சரணம் .


3 comments:

  1. The link is this and not the one given.

    http://youtu.be/We9fKaM-YAM

    In your link, another slokam rendered by Smt.Rajarajeswari is sung. So, kindly amend it at your earliest.

    One more word. To sing any song,in praise of Lord, in my perspective, and in my understanding, only pure devotion is required and not the shrill in one's voice.

    subbu rathinam.
    subbu rathinam.

    subbu rathinam.
    This is also available at
    http://kandhanaithuthi.blogspot.com

    ReplyDelete
  2. சுப்புஸார்

    லிங்கை நீங்க சொன்னபடி சரி பண்ணிட்டேன்.

    பாடும்போது பக்தி பூர்வமா பாடரதுதான் முக்கியம்ங்கரதை நான் மனப்பூர்வமா ஒத்துக்கறேன்;ஆனா என்னைமாதிரி அரைவேக்காடு உங்களைப்போல் பக்தி பொங்கிப் பெருக ஹம்சத்வனியில் பாடமுடியுமா?எனக்குத் தெரிந்த ஒரே ராகம் ஹிம்ஸைத்வனி :))

    ReplyDelete
  3. Laitha, superb! Himsadhwani ellam illa. Nannaathan iruku!! Good show. Keep singing:) Srikala also listened along with me and conveys her appreciation:)

    ReplyDelete