Monday, October 31, 2011

தரிசனம் தா,கந்தா!

          தரிசனம் தா,கந்தா!
 [மெட்டு..ஆர்ட் ஆப் லிவிங் பஜன்.."கோபாலா,கோபாலா.".]


 

கோலமயில் ஏறிவரும் வேலா!குணசீலா!
நீலகண்டன் நுதற்கண்ணிலுதித்த சிவபாலா !
அபிராமவல்லி நந்தனா,வள்ளிமனோஹரா,வா!வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!
வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!

ஆவினன்குடியின் கோவணாண்டியே!வா!
ஏரகத்தின் ஸ்வாமிநாதஸ்வாமியே !வா!
சீரலைவாய் செந்தில்நாதனே!வா!
பரங்குன்றத்து சுரமகள் நாயகா!வா!
பழமுதிர்ச்சோலை வஞ்சி நேசா!வா!
திருத்தணிகைமலை வள்ளீசா!வா!

கோலமயில் ஏறிவரும் வேலா!குணசீலா!
நீலகண்டன் நுதற்கண்ணிலுதித்த சிவபாலா !
அபிராமவல்லி நந்தனா,வள்ளிமனோஹரா,வா!வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!
வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!

காங்கேயா!கந்தா!கண்மணியே!வா,
ஓங்காரம் விளக்கிய குருகுகா!,வா,
ஓங்கி உலகளந்தவனின் மருகா!வா,
ஏங்கும் எங்களுக்காக இறங்கி நீ வா...இன்னும்
தாங்காதையா,திவ்யதரிசனம் தா!

கோலமயில் ஏறிவரும் வேலா!குணசீலா!
நீலகண்டன் நுதற்கண்ணிலுதித்த சிவபாலா !
அபிராமவல்லி நந்தனா,வள்ளிமனோஹரா,வா!வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!
வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!

4 comments:

  1. Hi Mam,
    ஆதிசங்கரரின் நரசிம்மர் மேல் பாடிய சம்ஸ்கிருத பாடல்களை நீங்கள் தமிழில் மொழி பெயர்த்த ஞாபகம் உள்ளது . அதை இப்போது தேடி பார்த்தும் கிடைக்க வில்லை
    pl. help me:)

    ReplyDelete
  2. ந.நா.,

    லக்ஷ்மி நரசிம்மர் பஞ்சரத்னம் சங்கரர் எழுதியது;இதுவரை அதை தமிழாக்கம் செய்ய நான் முயலவில்லை.

    உடனடியாக சமயம் இல்லை ;

    எழுதினால் நிச்சயமாக அனுப்புவேன்.

    சங்கரரின் ''ஷட்பதி'' என்ற விஷ்ணு ஸ்லோகத்தைப்பற்றிய என் பதிவை

    'கண்ணன் பாட்டு'வலையில் 'வண்டுத்துதி 'என்ற தலைப்பில் காணவும்.

    ReplyDelete