வாகீஸ்வரி ! வீணாபாணி !
கொலுவிருந்தருள்வாய்,கலைவாணி !
தூயவெண் தாமரை வாசினியே!
மாசில் வெண் அன்ன வாகினியே!
படைக்கும் கடவுளின் பத்தினியே!
கலைகள் யாவுக்கும் அதிபதி நீயே!
வாகீஸ்வரி ! வீணாபாணி !
கொலுவிருந்தருள்வாய்,கலைவாணி !
ஏட்டுச்சுவடியும் அக்ஷரமாலையும்
ஏந்தும் கரமுடைய எங்கள் தாயே !
ஸ்ருங்ககிரி அமர் சாரதையே !
வந்தருள்புரிவாய் பாரதியே!
வாகீஸ்வரி ! வீணாபாணி !
கொலுவிருந்தருள்வாய்,கலைவாணி !
வெண்ணுடையணிந்து ஒளிர்பவளே!
மெய்ஞானம் தரும் கலைமகளே!
உன்னருட்பார்வை ஒருகணம் பட்டால்
மந்தியும் மேதையாய் மாறிடுமன்றோ?
வாகீஸ்வரி ! வீணாபாணி !
கொலுவிருந்தருள்வாய்,கலைவாணி !
simple and nice.
ReplyDelete//வாகீஸ்வரி ! வீணாபாணி !
ReplyDeleteகொலுவிருந்தருள்வாய்,கலைவாணி ! //
அழகான பாடல் அம்மா.
கவிநயா,
ReplyDeleteநன்றி வருகைக்கு [தாமதமானாலும்]
very nice.
ReplyDeletethanks fr visiting n feedback raajaraajesvari!
ReplyDeleteபடமும் கவியும் அருமை.
ReplyDeletewelcome sriramjee,
ReplyDeletethanks a lot fr yr feeedback