Sunday, May 15, 2011

வழித்துணை

                              வழித்துணை

                                     
[அப்பையரின் 'மார்க்கபந்து 'ச்தோத்திரத்தைத் தழுவி எழுதிய கீழுள்ள

   பஜனை அதன் முழுமையான மொழி பெயர்ப்பு அல்ல.

   இதை "நந்தவனத்திலோர் ஆண்டி " என்ற பாட்டின் மெட்டிலேயே
    சுலபமாகப் பாடும்படி அமைத்திருக்கிறேன் ]

  சம்போ மகா தேவ தேவா -சிவ 
  சம்போமஹாதேவ தேவேச சம்போ!
 சம்போமஹாதேவ தேவா!


    நதிசூடும் சடையிலோர் கிரீடம் -புனித
    நுதலிலே ரதிபதியின் விதி முடித்த நயனம்,
   எதிரிகளை வதம் செய்யும் சூலம் -கொண்ட
   முதல்வா!எமக்கு நீ வழித்துணையாய் வருவாய்! (சம்போ)

    படமெடுத்தாடிடும் பாம்பும் -சடை
   முடியிலே பொங்கிடும் கங்கையின் நீரும்,
   கடைதேற்றும் ஓங்கார வடிவும் -கொண்ட
   விடையவா!எமக்குநீ வழித்துணையாய் வருவாய்! (சம்போ)

                                          

   தக்ஷயஞம் தடுத்த தீரம் -உலக
   ரக்ஷகரின் பகைவரை வென்றிடும் வீரம்,
  பொற்சிலை ஏந்திடும் கரமும் -கொண்ட
  பிக்ஷாடனரூபா! வழித்துணையாய் வருவாய்! (சம்போ)

  மன்மதனை அடக்கிய திருக்கண்  -விடம்  
  உண்டதால் கருநீல நிறமான கண்டம் , 
  விண்ணைச்சுமந்திடும் சிரமும் -மின்னும்
  வெண்பல்லும் கொண்டவா!வழித்துணையாய் வருவாய்! (சம்போ)

                                          

 மந்தஹாசம் சிந்தும்வதனம் -பெரும்
 மந்தரமலையினும் வலுவான தேகம்,
 சுந்தரி உறையும் இடப்பாகம் -கொண்ட
 நந்திவாகனா! நீ வழித்துணையாய் வருவாய்! (சம்போ)

அப்பைய்யரின் கீதசாரம் -இதனை
செப்புவோம் பக்தியாய் பயணிக்கும் நேரம்,
ஒப்பற்ற உமையொரு பாகன் -நம்மை
ரட்சிக்க நமது  வழித்துணையாக வருவான் (சம்போ)

9 comments:

  1. UNGALATHYU PAADALAI NEENGAL SUGGEST SAIDHA METTIL PAADI IRUKKIREN.
    INGU VANDHU KEZHUNGAL.
    SUBBU RATHINAM
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  2. subbusir,
    it was simply perfect;on prathosham i was simply thrilled to listen to the song ;thank u so much!

    ReplyDelete
  3. அருமையான மொழிபெயர்ப்பு மேடம்.
    பாட இலகுவான ராகம்.
    சுப்பு தாத்தாவின் பாடலையும் கேட்டேன் . அருமை. நன்றி.

    ReplyDelete
  4. வழித்துணை மட்டுமல்ல . வாழ்க்கை முழுதுக்கும் அவன் தானே துணை,
    பாடப் பாட சுகமாய் இருக்கிறது மேடம்.

    ReplyDelete
  5. அழகாய் இருக்குதம்மா பாடல். சுப்புதாத்தாவுடைய குரலில் கேட்டு ரசித்தேன்.

    ReplyDelete
  6. வழித்துணை எனப்பெயரிட்டு மார்க்க பந்து ஸ்தோத்திரத்தினை
    அதன் உட்கருத்தினை ஒட்டி அழகாக அமுதமாக நீங்கள் எழுதியபின்னே
    அதை பாட வேண்டும், அதையும் உடன் பாடிட வேண்டும் என நான்
    உந்தப்பட்டத்தில் அதிசயம் ஏதுமில்லை. அந்த நாள் பிரதோஷம் என்று
    பிறகு தான் தெரிந்தது.

    இந்த மார்க்க பந்து ஸ்தோத்திரம் பற்றி ஒரு நிகழ்ச்சி என் வாழ்வில்.
    1991 அல்லது 1992 என நினைக்கின்றேன். தஞ்சைக்கோட்டத்தில்
    HR Manager அதை எங்களது துறையில் P & IR Manager என சொல்வார்கள்.
    ஹை வோல்டேஜ் டென்ஷன். பல தரப்பட்ட தொழிற்சங்கங்களுடன்
    எப்போது பார்த்தாலும் பேச்சு , பேச்சு, பேச்சு தான். டென்ஷன், டென்ஷன் தான்.
    இருப்பினும் டென்ஷனே உத்தியோகத்தின் அங்கமாக இருந்தபோது என்ன செய்வது ?

    ஒரு நாள். மார்பு வலித்தது. காஸ் ட்ரபுள் தான். தெரிகிறது. இருந்தாலும் எனது
    நண்பர் டாக்டர் எம்.கிருஷ்ணசாமியிடம் ( தஞ்சை மெடிகல் காலேஜ் டீன் மற்றும்
    பிரபல கார்டியாலஜிஸ்ட் ) சென்றேன். அவர் ஒரு ஈ.ஸி.ஜி எடுத்தார். ஸ்டெதாஸ்கோப்பினால்
    பரிசோதனை செய்தார்.

    பிறகு என்னவோ பேச ஆரம்பித்தார். வெளியிலோ பேஷண்டுகள் கூட்டம். அதற்கெல்லாம்
    கவலைப்படாமல் பேசிக்கொண்டே இருந்தார். அவர் குடும்ப நண்பர், எனவே அவரது
    குடும்பம் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்.

    டாக்டர் ஸார் ! உங்கள் நேரம் பொன்னானது. !! ஏகப்பட்ட பேஷன்டுகள் காத்து இருக்கிறார்கள்.
    எனக்கு மருந்து எழுதிக்கொடுங்கள் என்றேன்.

    கொஞ்சம் பொறு என்றார். உள்ளே சென்றார். ஒரு புத்தகம் எடுத்து வந்தார். அதன் பக்கங்களைப்
    புரட்டி ஒரு பக்கத்தை என்னிடம் நீட்டினார்.

    மருந்து இங்கே இருக்கிறது. வலி வரும்பொழுதெல்லாம் இதைப்படி என்றார்.

    என்ன என்று பார்த்தேன்.

    மார்க்க பந்து ஸ்தோத்திரம்.

    என்ன டாக்டர் ! மருந்து வேண்டாமா ! என்றேன்.

    உனக்கு ஹார்ட்டில் ஒன்றும் விசேஷமாக இல்லை. மருந்து கொடுக்கும் அளவுக்கு. அதனால்,
    வலி வந்தால் இதைப் படி போதும் என்றார்.

    தொடர்ந்தார்:
    " நானும் இதைத்தான் படிக்கிறேன் ! "

    வழித்துணை மார்க்க பந்து இருக்கையிலே
    வலி வருமோ !!
    I realized that it was His advice.
    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  7. சிவகுமாரன்,

    கவிநயா,

    பாட்டை படித்து/கேட்டு ரசித்ததில் மகிழ்ச்சி;வருகைக்கு நன்றி.



    சுப்புசிர்,

    உங்கள் அனுபவத்தைப்படித்து ரசித்தேன்;ஒரு அலோபதி டாக்டரே

    இப்படி மார்க்கபந்து ஸ்லோகத்தை ப்ரிஸ்கரைப் பண்ணினாரென்றால்

    சிவனாரது மகிமையை என்னென்று வர்ணிப்பது?

    ReplyDelete
  8. சுப்பு அய்யாவின் அனுபவம் படித்தவுடன் சிவனாரின் மேல் உள்ள பற்று பனமடங்கு அதிகமானது.

    ReplyDelete