லிங்காஷ்டகம்
[ மெட்டு-பிரம்ம முராரி ]
திருபுரம் எரித்த தயாபர லிங்கம்;
பிறவிப்பிணி தனை அறுத்திடும்லிங்கம்;
தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.
இஷ்டமாய் தூயர்கள் சேவிக்கும்லிங்கம்;
பஸ்மமாய் காமனைப்பொசுக்கியலிங்கம்; துஷ்டதசமுகனும் வணங்கியலிங்கம்;
தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.
சுகந்தங்கள் சூழ்ந்ததோர் சுந்தரலிங்கம்;
அகத்தின் அழுக்கினை அகற்றிடும்லிங்கம்;
சகலரும் சரணம் அடைந்திடும் லிங்கம்;
தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.
உச்சியில் வளர்மதி சூடியலிங்கம்;
நச்சுடைநாகம் அணைத்திடும்லிங்கம்;
தக்ஷயஞம் தடுத்தருளியலிங்கம்;
தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.
குங்குமசந்தனம் பூசியலிங்கம்;
செங்கமலமாலை சூடியலிங்கம்;
முந்தையபாவங்கள் முறித்திடும்லிங்கம்;
தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.
தேவரும் யாவரும் துதித்திடும் லிங்கம்;
சேவிக்கும் அன்பர்க்கு சுகந்தரும் லிங்கம்;
காவியம் கொள்ளா கவின்மிகு லிங்கம்;
தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.
வில்வதளார்ச்சனை விரும்பிடும் லிங்கம்;
நல்லவை யாவுக்கும் காரண லிங்கம்;
செல்வச்செழிப்பினை சேர்த்திடும் லிங்கம்;
தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.
முனிவர்,சுரஅசுரர் பூஜிக்கும்லிங்கம்;
மணமலர் மாரியில் மறைந்திடும்லிங்கம்;
மனத்தினில் பக்தியைத்தூண்டிடும் லிங்கம்;
தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.