ஏன் படைத்தாய் மானுடனாய்?
---------------------------------------------------
குழலாகிட வரங் கொடுத்திருந்தால் ,கண்ணன்
குமிழ்வாயில் குடி இருந்திருப்பேன்;....வண்ண
மயிலாகிட வாய்ப்பளித்திருந்தால் ,அவன்
முகுடத்தில் ஓரிடம் பிடித்திருப்பேன் .
தென்றலாய் அன்று தவழ்ந்திருந்தால் ,மண்ணைத்
தின்றவனைத் தொட்டு மகிழ்ந்திருப்பேன் ;..பசுங்
கன்றாய்அன்றே பிறந்திருந்தால் ,கண்ணன்
குழலிசையில் என்னை இழந்திருப்பேன்.
பாரதப்போரினில் அன்றவன் ஒட்டிய
பார்த்தனின் தேராய் இருந்திருந்தால்,..என்
சாரதி செப்பிய கீதையின் உட்பொருள்
ஓரளவாயினும் உணர்ந்திருப்பேன்.
'நான்' என்னும் அகந்தையில் நீ தந்த நேரத்தை
வீண்வம்புப்பேச்சில் விரயஞ்செய்யும்...ஈன
மானுடனாக இம்மண்ணில் மரித்திட
ஏனென்னைப் படைத்தனை,நான்முகனே?
=====================================================

அவ்வாறெல்லாம் நீ இல்லை என்று உனக்கு எப்படி தெரியும்?
ReplyDeleteமானுடனாய் படைத்ததனால்தான் இன்று நீ அவனைப் பாடுகிறாய்?
///நான்' என்னும் அகந்தையில் நீ தந்த நேரத்தை
ReplyDeleteவீண்வம்புப்பேச்சில் விரயஞ்செய்யும்...ஈன
மானுடனாக இம்மண்ணில் மரித்திட...//
மறுக்க முடியாத உண்மை. இந்த அகந்தை இல்லாத வாழ்க்கையானால் சந்தோஷமும் சுலபமே.
அழகான கவிதை.
நன்றி