Wednesday, March 14, 2012

அபிராமி!அருள்வாய் நீ !

(ஓராண்டுக்கு முன் பதிவிட்ட அம்மன் பாட்டை மீண்டும் காரடை நோன்புக்காக இங்கு அளிக்கிறேன் )




அபிராமி!அருள்வாய் நீ!
(மகிஷாசுரமர்த்தினி ஸ்லோக மெட்டில் பாடலாம் .)


இடர்களைநீக்கித் தடங்கல் தகர்க்குங்
கடவுளாம் கணபதியின் தாயே!
விடமுண்டகண்டனின் இடப்பாகந்தனில்
இடம்பிடித்தமர்ந்த மகாமாயே!
கருவையுங்காக்கும் கர்ப்பரக்ஷாம்பிகே ,
குருகுக ஜனனி ,காத்யாயினி,
திருக்கடவூர் அமர் அன்னை அபிராமி,
கருணையோடிங் கெழுந்தருள்வாய்நீ !

முராரிசகோதரி,புராரிமனோகரி,
பரமேஸ்வரி,பவதாரிணி!
பர்வதராஜகுமாரி,கௌரி,
சர்வேச்வரி,சுகதாயினி!
சாரதே,சாமளே ,சாம்பவி,ஷாலினி,
சாகம்பரி,திருசூலினி!
நாராயணி,நவதுர்க்கே,நீலி,
பேரருள் பொழிந்திட வருவாய் நீ!

கற்பகவல்லி,காளி,காமேஸ்வரி,
கருணாசாகரி,கல்யாணி!
கற்பனைக்கெட்டா அற்புதரூபிணி ,
அன்னபூரணி,மனோன்மணி!
சொற்பதங்கடந்த சுந்தரி,சங்கரி,
சுமதுரபாஷினி,சுஹாசினி!
நின்பதமேகதிஎன்று பணிந்தோம்,
அன்புடன் எங்களுக்கருள்வாய் நீ!

5 comments:

  1. முதலில் கானடா ராகத்தில் பாடினேன். நன்றாகத்தான் இருந்தது. இருந்தாலும் என்றோ கேட்ட ஒரு மெட்டு நினைவுக்கு வர அந்த மெட்டில் பாடிப் பார்த்தேன். மேல் ஸ்ருதியில் பாட முடிந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    இதோ இங்கு உங்கள் பாடலை கேளுங்கள்.
    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  2. http://youtu.be/GKl2GeZ-i8g

    Pl cut and paste the above URL

    subbu rathinam

    ReplyDelete
  3. மகிஷாசுரமர்த்தினி மெட்டிலேயே பாடின்டிருந்த நான் உங்க மெட்டில் கேட்டதும் மீண்டும் மீண்டும் மூனுமுறை போட்டுக் கேட்டுப்பாத்தேன் ...பாடத்தான் முடியலை கேட்டாவது ரசிக்கலாமே என்று ! ரொம்ப நன்றி சுப்புசார் !

    ReplyDelete
    Replies
    1. To be frank, I thought u will instantly recollect the old Hindi song by Latha KALI GOTI DWAAR KHADI RE... which i first heard possibly in 1985 or so, and still get mesmerized on thoughts of this song.
      subbu rathinam

      Delete
  4. ஸ்ட்ரைக் ஆகலை சார் ;உங்க பின்னோட்டம் படிச்சப்புரந்தான் புரிஞ்சிது;அப்ரமாவும் லிரிக்ஸ் நெனவில்லை!என் அண்ணா எனக்கு வெச்ச பேர் தான் நெனவுக்கு வரது!"TYOOOOOB LIGHT"

    ReplyDelete