Tuesday, February 28, 2012

அதிசுந்தரம் !!



  அதிசுந்தரம் !!

பன்னிருகரம் ,மூவிரு சிரம்,
குங்கும நிறம் ,அதிசுந்தரம்!
குகன் அதிசுந்தரம் !!

அசுரரையழித்த சுர சேனானி
ஒளிருது  வெண்ணீறணிந்தவன் மேனி !
துணைவியாம்  குன்றத்தில் தேவயானி !
தணிகையில் வள்ளியாம் இளையராணி !

பன்னிருகரம் ,மூவிரு சிரம்,
குங்கும நிறம் ,அதிசுந்தரம்!
குகன் அதிசுந்தரம் !!

வற்றாது கருணை சுரந்திடும் கேணி
பழநியம்பதிவாழ் தண்டாயுதபாணி !
பிறவிக்கடல்தாண்ட உதவிடும் தோணி
"சரவணபவ "எனும் மந்திரவாணி !

பன்னிருகரம் ,மூவிரு சிரம்,
குங்கும நிறம் ,அதிசுந்தரம்!
குகன் அதிசுந்தரம் !!

2 comments:

  1. அதிசுந்தரம் !!

    subbu rathnam
    you can listen here also
    www.kandhanaithuthi.blogspot.com

    ReplyDelete
  2. இவ்வளவு ப்ராம்ப்டா பாடி இணைத்ததற்கு நன்றி சுப்புசார்.

    பாவத்தோடு அழகாகப் பாடியதைக் கேட்டு மிகவும் ரசித்தேன் மீண்டும்ஸ்பெஷல்நன்றி

    ReplyDelete