(கீழுள்ள துதி 'நாகேந்திர ஹாராய 'என்று தொடங்கும்
சிவபஞ்சாக்ஷர ஸ்லோகத்தைத் தழுவி எழுதப்பட்டதே அன்றி
அதன் தமிழாக்கம் அல்ல.)
அதன் தமிழாக்கம் அல்ல.)
நஞ்சுண்ட நாதனை நெஞ்சில் நினைப்போம்;
நயனம் மூன்றுடையானை நமஸ்கரிப்போம்;
நச்சரவணிவோனின் நந்நாமம் நவில்வோம்;
நகாரமொலிக்கும் பஞ்சாக்ஷரம் ஜெபிப்போம்; ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ம:
மதிசூடும் மகேசன் மகிமையை மொழிவோம் ;
மதனை எரித்தவனின் மலரடி தொழுவோம் ;
மதிநுதல் மங்கை மணாளனைத் துதிப்போம் ;
மகாரமொலிக்கும் மாமந்திரம் ஜெபிப்போம் ;மதனை எரித்தவனின் மலரடி தொழுவோம் ;
மதிநுதல் மங்கை மணாளனைத் துதிப்போம் ;
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
சி
சிரத்தில் நதி சூடும் சிவனடி பணிவோம்;
சசி சேகரன் சீரடி சரணடைவோம்;சித்தத்திலரனின் சுபநாமம் பதிப்போம் ;
சிகாரமொலிக்கும் சிவமந்திரம் ஜெபிப்போம் ;
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
வா
வாணுதற்கண்ணி பங்கனை வாழ்த்துவோம் ;
வார்சடையோன் கழலில் சிரந் தாழ்த்துவோம் ;
வானோர் வணங்கும் வள்ளல்பேர் உவந்துரைப்போம்
வாகாரமொலிக்கும் சிவமந்திரம் ஜெபிப்போம்;
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ய
யமனை வதைத்த ஈசன் வெண்ணீறு அணிவோம் ;
யக்ஷ ஸ்வரூபனின் இணையடி பணிவோம் ;
தக்ஷயஞம் தடுத்தோன் இனியபேர் இசைப்போம் ;யக்ஷ ஸ்வரூபனின் இணையடி பணிவோம் ;
யகாரமொலிக்கும் பஞ்சாக்ஷரம் ஜெபிப்போம்;
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம் ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
அருமையான பதிவு.
ReplyDeleteமிக்க நன்றி.
Kindly listen to this Stotram and Shiva Panchakshari here.
ReplyDeletesubbu rathinam.
you may also visit here and listen
the same.
http://pureaanmeekam.blogspdot.com
ஓம் நமசிவாய.
ReplyDeleteரொம்ப அழகா இருக்கு அம்மா.
கலா அவர்களும் சுப்பு தாத்தா பாடியது இரண்டும் மிக இனிமை.
(1)ரத்னவேல் ஜி ,
Deleteவந்து ரசித்தற்கு நன்றி
(2)சுப்புசார் ,
தமிழ் துதியோடு ஒரிஜினல் பஞ்சாக்ஷர ஸ்லோகத்தையும் நீங்க பாடியதைக் கேட்டதும் ஆனந்தம்!பரமானந்தம்!!
(3)கவிநயா,
இருவருடைய பாட்டையும் கேட்டு ரசித்தது மகிழ்ச்சி அளிக்கிறது
மிக இனிமை. செவியும் மனமும் ஒரு சேர நனைகின்றன.
ReplyDeleteஓம் நமசிவாய
பகிர்வுக்கு நன்றி அம்மா
சிவகுமாரன்,
Deleteவந்து ரசித்ததற்கு நன்றி .