Sunday, January 29, 2012

கூடிக்கலந்து...............

                                                                       
கூடிக்கலந்து...............
('சிந்துபைரவி ' படத்தில் வரும்  "நானொரு சிந்து "பாட்டின்
மெட்டில்  ஒவ்வொரு வரியும்  கச்சிதமாகப்
பொருந்தும்படி  நான் எழுதிய  கீழுள்ள முருகன் பாட்டை ,
அதே மெட்டில் [சுகாசினி மாதிரி சோகமா  பாடாமல்] 
குகனை நினைத்துக் குஷியாப் பாடிப்பாருங்கள் !)

கூடிக்கலந்து..........................
காவடிச்சிந்து..........................
கூடிக்கலந்து காவடிச்சிந்து
பாடு குகன்மேலே ..கேட்டு
ஆடிவரும் மயிலே !
தந்தையுந்தாயும் கந்தனே ..இந்த
சொந்தம் புதியதில்லே..இது
விந்தைப்புதிருமில்லே!.........................

கூடிக்கலந்து காவடிச்சிந்து
பாடு குகன்மேலே ,..கேட்டு
ஆடிவரும் மயிலே ,
தந்தையுந்தாயும் கந்தனே,..இந்த
சொந்தம் புதியதில்லே,..இது
விந்தைப்புதிருமில்லே..
கூடிக்கலந்து காவடிச்சிந்து
பாடு குகன் மேலே...கேட்டு
ஆடிவரும் மயிலே !.....................................

[ 1 ]மூவிருமுகத்தானுக்கென்னென்ன பேரோ?.........................
நாவாலவன் பேரைச்சொல்லாதார் யாரோ?.............................
மூவிருமுகத்தானுக்கென்னென்ன பேரோ?
நாவாலவன் பேரைச்சொல்லாதார் யாரோ?
சேவல் கொடியோன்பேர் ஜெபித்திருந்தாலே
காவல்தெய்வமாகிக்காத்திடுவானே,
நாமஞ்ஜெபிச்சா ...................நற்கதியுண்டு..................அவன்
நினைப்பிருந்தாலே நிம்மதியுண்டு..நம்புங்கடி.......................

கூடிக்கலந்து காவடிச்சிந்து
பாடு குகன்மேலே ,..கேட்டு
ஆடிவரும் மயிலே .............................................


[2 ]வாயாலவன்நாமம் ஒதிநின்றாலே........................................
நோய்நொடி நீக்கி நலந்தருவானே,.............................................
வாயாலவன்நாமம் ஒதிநின்றாலே
நோய்நொடி நீக்கி நலந்தருவானே;
ஏவல்வினையாவும் எரித்திடுவானே ,
பாவங்கள்யாவும் பொசுக்கிடுவானே,
தலைவனுக்கான ......................ஆறெழுத்தென்ன?....................
தலைவனுக்கான ஆறெழுத்தென்ன?..சொல்லுங்கடி ............

ஓம்......சரவணபவா...................
ஓம்......சரவணபவா...................
ஓம்......சரவணபவா...................

கூடிக்கலந்து காவடிச்சிந்து
பாடு குகன்மேலே ,..கேட்டு
ஆடிவரும் மயிலே ,
தந்தையுந்தாயும் கந்தனே,..இந்த
சொந்தம் புதியதில்லே,..இது
விந்தைப்புதிருமில்லே..
கூடிக்கலந்து காவடிச்சிந்து
பாடு குகன்மேலே ....கேட்டு

ஆடிவரும் மயிலே!................

2 comments:

  1. //கூடிக்கலந்து காவடிச்சிந்து
    பாடு குகன்மேலே ,..கேட்டு
    ஆடிவரும் மயிலே ,
    தந்தையுந்தாயும் கந்தனே,..இந்த
    சொந்தம் புதியதில்லே,..இது
    விந்தைப்புதிருமில்லே..//

    மிக அழான வரிகள் அம்மா.

    ReplyDelete
  2. வந்து பின்னூட்டமளித்ததற்கு நன்றி கவிநயா!

    ReplyDelete