Sunday, January 8, 2012

மைத்ரீம் பஜத !




       8.1.1994  அன்று மகாசமாதி ஏற்றுக்கொண்ட 
காஞ்சி பரமாச்சார்யார் (நடமாடும் தெய்வம்)
அவர்களின்  நினைவாக, அவர்  உலக ஐக்கியத்துக்காக
எழுதி அருளி எம் .எஸ்  அவர்கள்ஐக்கிய நாட்டு சபையில் பாடிய  ''மைத்ரீம் பஜத''என்ற சம்ஸ்க்ருத பாடலை
என் சிற்றறிவிற்கு எட்டியவரை தமிழாக்கி ,
இன்று (8.1.12) கலா அவர்களின்  குரலில்
பரமாச்சாரியாரின் பாதகமலங்களில் சமர்ப்பிக்கிறேன்.

              மைத்ரீம் பஜத !

மைத்ரீம்  பஜத ,அகில ஹ்ருஜ் -ஜேத்ரீம்!

அனைத்துளம் வெல்லும் நேயம் வளர்ப்பீர்!

ஆத்மவதேவ  பராநபி  பச்யத !

தமைப்போல் மாற்றார் தமையும் காண்பீர்!

யுத்தம் த்யஜத! ஸ்பர்தாம் த்யஜத!

விடுவீர் போரை,ஆதிக்க வெறியை!

த்யஜத  பரேஷ்வக்ரமம்--ஆக்ரமணம்!

துறப்பீர் பிறரதைப்  பறிக்குந்தீநெறியை!


ஜநநீ  ப்ருதிவீ   காமதுகாஸ்தே ,

விரும்புவதெல்லாம் தருபவள் புவித்தாய்;

ஜனகோதேவ :  ஸகல தயாளு :!

கருணையில் கங்கையாம் எந்தை ஈசன் !

தாம்யத!தத்த !தயத்வம்  ஜனதா:!

மாந்தரே! பொறை,கொடை,பரிவு பயில்வீர்!   

ச்ரேயோ  பூயாத்  ஸகல  ஜநாநாம் !

பாரினில் யாவரும் மேநிலையுறுவீர்!   


[நன்றி :ர.கணபதியின் "மைத்ரீம் பஜத"]
[நன்றி:குமரனின் 'கூடல்'வலையில் உள்ள தமிழுரை ]






















No comments:

Post a Comment