Tuesday, December 27, 2011


 

அருள்வாய் முருகா!

ஒருமுகப் படுத்திய மனத்திலே முருகா!உன்
திருமுகங்காட்டியருள்வாயே !

இருமணங்கொண்டவா ! வள்ளிதேவயாநியுடன்
தரிசனந்தந்தெனக்கருள்வாயே!

முக்கண்ணனுக்கு பிரணவப் பொருளினைப்
பக்குவமாய்ச்ச்சொன்ன பாலகுரு!

நான்மறை போற்றிடும் நாயகா, எனக்குள்ளே
ஞான ஒளி ஈந்தருள்வாயே!

பஞ்சாம்ருத அபிஷேகப் பிரியா! என்
நெஞ்செல்லாம் நீ நிறைந்திடுவாயே!

ஆறெழுத்துள்ள  உன்பேர் ஜெபித்தே கடை
தேறிடப்பேரருள் புரிவாயே!

ஏழேழ் பிறவியுமுன் இணையடி நிழலிலே
ஏழையேன் இருந்திட அருள்வாயே!

எட்டுக்குடிஅழகா!சட்டியின் நாயகா! 
பொற்றாள்களில் புகல்  தருவாயே! 

ஒன்பது  கோள்தரும் துன்பந்தவிர்த்தருளும்
தென்பழநியின்  தண்டாயுதனே !

பத்தரின் மித்ரனே!பித்தனின் புத்ரனே!
முக்தியெனும் நிலை அருள்வாயே !




1 comment:

  1. ஔவைப் பாட்டியைப் போலவே அழகனை அழகாக வரிசைப் படுத்திப் பாடியிருக்கிறீர்கள் அம்மா :)

    ReplyDelete