தூது செல்லடி சகியே !
சேதிசொல்லடி சகியே!..சண் முகனிடம்
தூது செல்லடி சகியே !..என் நிலைபற்றி [சேதி..]
காலைச்சேவல் கூவக்கேட்டால்
சேவல் கொடியோன் நினைப்பே ;
ஓங்கார ஒலி கேட்டால்
காங்கேயனின் நினைப்பே !
ஆற்றில் நீராடும்போதும்
ஆறுமுகனின் நினைப்பே,
குளித்துக் குங்குமமிட்டால்
குகனின் செம்முகம் நினைப்பே ..
சேதிசொல்லடி சகியே!..சண் முகனிடம்
தூது செல்லடி சகியே !..என் நிலைபற்றி [சேதி..]
வேல்விழியில் மை இட்டால்
விசாகன்கை வேல் நினைப்பே ;
குழல்வாரிப் பின்னும்போதும்
மயில்வாகனன் நினைப்பே ..!
குன்றத்தில் மணந்தென்மன
மஞ்சத்தில் அமர்ந்தவனைக்
காணாதென் வளைகழன்று
மேகலை நெகிழ்ந்த தென்று..
சேதிசொல்லடி சகியே!..சண் முகனிடம்
தூது செல்லடி சகியே !..என் நிலைபற்றி [சேதி..]
குறமகள் கரம்பற்றி
சுரமகளை மறந்தானோ?
இந்தக்கணம் வள்ளியோடு
கந்தகிரி வரணுமென்று ..
சேதிசொல்லடி சகியே!..சண் முகனிடம்
தூது செல்லடி சகியே !..என் நிலைபற்றி [சேதி..]
தூது செல்லடி சகியே !..என் நிலைபற்றி [சேதி..]
சுகமான பாடல் அம்மா. கலா அவர்களின் குரலில் இன்னும் சுகமாகிறது :) நன்றி அம்மா.
ReplyDeleteகவிதை நயமும், திருமதி.ஸ்ரீ கலா அவர்களின் இனிய குரலும் சிறப்பாக அமைந்துள்ளது.வாழ்துக்கள்.
ReplyDelete