Wednesday, August 31, 2011

ஷோடசநாம மகிமை




ஷோடசநாம மகிமை



வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                          சுமுகா! உந்தன் சுந்தரநாமம்
                         செப்பிட சித்திக்கும் ஞானப்ரகாசம்;
                         ஏகதந்தா! உன் இணை இல்லா நாமம்
                         இசைப்போர் உள்ளத்தில் பொங்கும்பரவசம்.!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                           கபிலா! உந்தன் கனிரசநாமம்
                           கூறிடக்கிடைக்கும் உன் கருணாகடாக்ஷம்;
                           கஜகர்ணா! உன்கவின்மிகுநாமம்
                           பாடிடக்கூடிடும் முடிவினில் மோக்ஷம்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                            லம்போதரா!உன் நிர்மல நாமம்
                            நவின்றிட நிலைத்திடும் நித்யானந்தம்;
                           விகடா!உந்தன் உன்னத நாமம்
                           உரைப்பவருள்ளத்தில் உறைந்திடும் சாந்தம்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                              விக்னராஜா!உன் நிகரில்லாநாமம்
                              பயின்றிடக்கரைந்திடும் பண்ணிய பாவம்;
                              விநாயகா!உன் இன்சுவைநாமம்
                              மொழிந்திட முறிந்திடும் முன்வினை யாவும்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                                தூமகேது!உன் தேவாம்ருத நாமம்
                                தோத்தரித்தாலுண்டு துக்கநிவாரணம்;
                                கணாத்யக்ஷா!உன் கல்கண்டுநாமம்
                               ஒன்றே விக்னவிநாச காரணம்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                                 பாலச்சந்த்ரா!உன் புண்ணியநாமம்
                                 பயின்று பணிந்தோம் உன்மலர்ப்பாதம்;
                                 கஜானனா!உன் அருமை நாமம்
                                அதற்கிணை ஒன்றெனில் அது சதுர்வேதம்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                                 வக்ரதுண்டா!உன் ஒப்பில்லா நாமம்
                                 ஓதுவோர் வாழ்வினில் ஒழிந்திடும் தொல்லை;
                                 சூர்ப்பகர்ணா! உன் சுப நாமம்
                                 சொல்பவர்க்கென்றும் சோகமே இல்லை!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                                 ஹேரம்பா!உன் ஜகம்புகழ்நாமம்
                                 ஜெபிப்போர் குறைகள் யாவையும் தீரும்;
                                 ஸ்கந்தபூர்வஜா!உன் திருநாமம்
                                 ஸ்மரிப்போர் வேண்டியவை நிறைவேறும்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !









3 comments:

  1. விநாயகரின் திருநாமங்களை வைத்துச் செய்த கவி இனிமை அம்மா. சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. உங்களது பாடலை அடானா ராகத்தில் ஒரு பஜனை பாடல் போல பாட முயற்சித்திருக்கிறேன்.
    நாளை எனது வலையில் வரும். கேளூங்கள். சரி இல்லை என்றால்
    டெலிட் செய்து விடுகிறேன்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  3. Will u be providing ur email so that you can preview my song and decide on its worthiness of its being posted.
    subburathinam
    meenasury@gmail.com

    ReplyDelete