Friday, August 5, 2011

தாயே!தாள் பதிப்பாய்!


தாயே!தாள் பதிப்பாய்!
[கலாவின் குரலில் இந்தபாட்டைக்கேட்டு மகிழுங்கள் ]

மின்னல் முகிலிடையே பளிச்சிடுவதுபோல்


கன்னங்கரு முடியிடையே வகிடு மின்ன,


கன்னல்கரத்தாளாய்க் காணும் அபிராமி!


உன்பொன்னடி சென்னியில் பதித்துவிடு!




விடம் விழுங்கிய விடையவன் மேனியிலே


இடப்பாகம் அபகரணம் செய்தவளே!


மதங்கன் மகளே!உந்தன் மலரடியால்


மடமதியேன் சென்னியை மிதித்துவிடு!




அத்தையாய்க் குறமகள் உறவாடுகிறாள்!


தத்தையும் தொற்றிக்கொண்டதே உன் தோளில்!


சொத்தையோ,சுக வாழ்வையோ வேண்டவில்லை;


பக்தைமேலுந்தன் தாள் பட்டால் போதுமம்மா!




அன்று பிதற்றிய பட்டருக்குதவிடவே


விண்ணில் முழுமதி காட்டி நீ வியக்கவைத்தாய்!


இன்று பாட்டென எண்ணிப் பிதற்றி நிற்கும்


எந்தன் சென்னியில் தாயே!தாள் பதிப்பாய்!

14 comments:

  1. //இன்று பாட்டென எண்ணிப் பிதற்றி நிற்கும்
    எந்தன் சென்னியில் தாயே!தாள் பதிப்பாய்!//

    ரிப்பீட்டு!

    ReplyDelete
  2. sankar,
    so nice to see u after a lo-------------ng time!
    ws missing u n yr feed back!thank u!

    ReplyDelete
  3. kavinaya,
    thanks fr visiting!hope u heard kala singing?
    f u can give fdbck on the music i shl b grtful!?

    ReplyDelete
  4. இப்போதான் கேட்டேன் அம்மா! அப்பாடி! என்ன இனிமையாக இருக்கு அவங்க குரல்! மனசை உருக்கிய ராகம். மிக்க நன்றி அம்மா, உங்கள் இருவருக்கும்.

    ReplyDelete
  5. நெஞ்சை உருக்கும் பாடல்.
    பாடிய கலா அவர்களின் குரல் அருமை.
    எனக்கு ஒரு ஆசை.
    என் பாடலையும் அவர்கள் பாடுவார்களா ?

    ReplyDelete
  6. கவிநயா நன்றி.லலிதாம்மா விடாப்பிடியா கேட்டு எனக்கு பாராட்டு வாங்கிட்டாங்க.
    சிவகுமாரன் அவர்களே நன்றி.
    Thanks
    kala

    ReplyDelete
  7. kala,how can i ignore yr contribution which lends life to my composition?

    ReplyDelete
  8. திருமதி கலா அவர்கள் அழகாக பாடியிருக்கிறார்கள்.
    வாழ்த்துக்கள்.
    இந்தக் கிழவனுக்கும் இந்தப் பாடலை பாடிட் ஓர் ஆசை .
    பாடிவிட்டான் யதுகுல காம்போதி ராகத்திலே
    http://youtu.be/eVCEeFJ_cT8
    கேட்பதற்கு யாரும் இல்லாவிட்டாலும்
    அன்னை அபிராமி கண்டிப்பாக கேட்பாள்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  9. நன்றி சுப்புசார்!

    HTTP யில் பாட்டைக் கேட்க முயன்றேன்;இணைப்பு இது வரை கிடைக்கலை;ஏதாவது மிஸ்டேக் இருக்குமோ?செக் பண்ணமுடியுமா?

    ReplyDelete
  10. http://youtu.be/eVCEeFJ_cT8

    Please cut and paste the above URL. you will be taken to youtube. There u hear the song.

    subbu thatha

    ReplyDelete
  11. ENJOYED YR MUSIC!ONLY FIRST ONE U HV SUNG;NOT ALL FOUR?
    U WERE REALLY SINGING WITH FULL OF BHAVAM!THANKS!

    ReplyDelete
  12. தாத்தாவின் உருக்கமான பாடலையும் கேட்டு மகிழ்ந்தேன். நன்றி தாத்தா!

    ReplyDelete
  13. கவி நயம் சிறப்பாக உள்ளது. கலா அவர்களின் குரல் தேனினும் இனிமையாக உள்ளது.

    ReplyDelete