Friday, July 29, 2011

                 எங்க  ஆத்தா !

                               

ஆடியிலே ஆத்தா !ஒன்ன  
தேடி நாங்க ஓடிவந்தோம் ;
கூடி கூடிப் பாடிவந்தோம் செல்லாத்தா!..நீ
 நேராவந்து எங்க முன்னே நில்லாத்தா!

ஏழை பாழை எல்லாம் ஒண்ணா
கூழு வச்சிக் கும்பிடறோம்;
தாழ வந்து ஏத்துக்கடி செல்லாத்தா!..காலந்
தாழ்த்தாம கண்ணுமுன்னே நில்லாத்தா!..காலந்
தாழ்த்தாம கண்ணுமுன்னே நில்லாத்தா!


ஆடியிலே ஆத்தா !ஒன்ன
தேடி நாங்க ஓடிவந்தோம் ;
கூடி கூடிப் பாடிவந்தோம் செல்லாத்தா!..நீ  
நேரா வந்து எங்க முன்னே நில்லாத்தா!

பொன்ன வெக்கும் எடத்தில் சின்ன
பூவவச்சிப் பூசை பண்ணோம்;
மாடி,கோடி வேண்டலடி செல்லாத்தா!..நீ
மனசவுட்டு மறையாம  நில்லாத்தா..நீ
மனசவுட்டு  மறையாம  நில்லாத்தா!

ஆடியிலே ஆத்தா !ஒன்ன

தேடி நாங்க ஓடிவந்தோம் ;
கூடி கூடிப் பாடிவந்தோம் செல்லாத்தா!..நீ
நேராவந்து எங்க முன்னே நில்லாத்தா!



[ கே..ஆர் எஸ் இன் படவேடு அம்மன் பதிவும்,கவிநயாவின் 
'ஆடியிலே கூழு வச்சு' பதிவும்  ஏற்படுத்தியபாதிப்பின் விளைவு என்னுடைய ஆத்தா பாட்டு!]


2 comments:

  1. //மாடி,கோடி வேண்டலடி செல்லாத்தா!..நீ
    மனசவுட்டு மறையாம நில்லாத்தா.//

    நல்லாயிருக்கு அம்மா! அதுதான் வேணும் :)

    ReplyDelete
  2. மனசை விட்டு மறையாம நிற்கிறது பாட்டு ... அந்த ஆத்தாளைப் போலவே.

    ReplyDelete