Sunday, June 26, 2011

தாயே!நான் உன் சேய்!


   தாயே!நான் உன் சேய்!

தாயே !என்னைப் பூங்கரத்தால்
வாரி அள்ளம்மா!
சேயாய் என்னை உந்தன் தோளில்
சாய்த்துக்கொள்ளம்மா!

பிறவிக்கடலில் மூழ்கக் கண்டும்
பாராமுகம் ஏனம்மா?
புகல் வேண்டிக் கதறும் பிள்ளைக்கு
பெற்றவள் பதில் 'மௌனமா?'

[தாயே !என்னைப் பூங்கரத்தால்
வாரி அள்ளம்மா!
சேயாய் என்னை உந்தன் தோளில்
சாய்த்துக்கொள்ளம்மா!]

முன்வினைப் பயன் தந்தபின்னும்
சினம் ஏன் தணியவில்லையோ?
திருந்தி வருந்தும் குழந்தை கண்டு
இதயம் இளகவில்லையோ?

[தாயே !என்னைப் பூங்கரத்தால்
வாரி அள்ளம்மா!
சேயாய் என்னை உந்தன் தோளில்
சாய்த்துக்கொள்ளம்மா!]

துட்டப்பிள்ளையைத் திட்டியடித்துத்
திருத்தும் உரிமை உனக்குத்தான்!
தாயுன் மடியில் புகுந்து கொஞ்சும்
உரிமை எனக்கே எனக்குத்தான்!

[தாயே !என்னைப் பூங்கரத்தால்
வாரி அள்ளம்மா!
சேயாய் என்னை உந்தன் தோளில்
சாய்த்துக்கொள்ளம்மா!]

3 comments:

  1. //தாயுன் மடியில் புகுந்து கொஞ்சும்
    உரிமை எனக்கே எனக்குத்தான்!//

    my most favorite line :)
    ச்வீட் அம்மா!

    ReplyDelete
  2. "கற்பூரநாயகி மூலம்"{கவிநயா} தங்கள் தள்த்தினைக் கண்டேன். அருமையான பாட்டு, இனிமையான குரல். வாழ்த்துக்கள் பல.--பத்மாசூரி.

    ReplyDelete
  3. @கவிநயா ,

    வருகைதந்து மகிழ்ச்சி அளிக்கிறது;'அம்மா' என்ற சொல்லே இனிக்கிறதே!




    @பத்மா சூரி அவர்களே,

    முதல் வருகை!!மிக்க மகிழ்ச்சி!நன்றி!

    ReplyDelete