வேண்டும்!
சூப்பரா இருக்கும் ]
கந்தா! என் மனத்தாசை நிறைவேறவேண்டும்;
நெஞ்சில் நீ நிரந்தரமாய்க் குடியேறவேண்டும்;
என்குறைதீர வேண்டும்;
முருகா,ஓம் முருகா!
முருகா,ஓம் முருகா!
வேலேந்தி மயில்மீது நீதோன்ற வேண்டும்;
நான்காணவேண்டும்;
முருகா,ஓம் முருகா!
முருகா,ஓம் முருகா!
தேனோடு தினையை நான் பரமாறவேண்டும்;
நீ பசியாற வேண்டும்.
முருகா,ஓம் முருகா!
முருகா,ஓம் முருகா!
செல்லுமிடமெல்லாமுன் தலமாக வேண்டும்;
உன்மயிலாடவேண்டும்;
முருகா,ஓம் முருகா!
முருகா,ஓம் முருகா!
''என்னுள் நீ,உன்னுள் நான்''என்றாக வேண்டும்;
நாம் ஒன்றாக வேண்டும்.
முருகா,ஓம் முருகா!
முருகா,ஓம் முருகா!
நெஞ்சுருகி நானுந்தன்துதிபாடவேண்டும்;
நீஜதிபோடவேண்டும்;
முருகா,ஓம் முருகா!
முருகா,ஓம் முருகா!
வஞ்சியுடன் குஞ்சரியும் ஸ்ருதி போடவேண்டும்;
நீமகிழ்ந்தாட வேண்டும்;
முருகா,ஓம் முருகா!
முருகா,ஓம் முருகா!
உன் நிழலே எனது பஞ்சணையாக வேண்டும்;
நான் துஞ்ச வேண்டும்;
முருகா,ஓம் முருகா!
முருகா,ஓம் முருகா!
உன் கழலே என் தலையணையாக வேண்டும்;
என் துணையாக வேண்டும்.
முருகா,ஓம் முருகா!
முருகா,ஓம் முருகா!
நிறுத்தாமல் என் நா உன்பேர் கூறவேண்டும்;
என்வினைதீற வேண்டும்;
முருகா,ஓம் முருகா!
முருகா,ஓம் முருகா!
பிறவிக்கடல் தாண்டிக்கரையேற வேண்டும்;
நான் கடைத்தேற வேண்டும்.
முருகா,ஓம் முருகா!
முருகா,ஓம் முருகா!
சரவணப்பொய்கையாய் என் மனம்மாற வேண்டும்;
பா மலர வேண்டும்;
முருகா,ஓம் முருகா!
முருகா,ஓம் முருகா!
பாமலர்கள் நீ அமரும் மணையாக வேண்டும்;
மணங்கமழ வேண்டும்;
அருள் மணங்கமழ வேண்டும்;
நினதருள் மணங்கமழ வேண்டும்!
கந்தா! என் மனத்தாசை நிறைவேறவேண்டும்;
நெஞ்சில் நீ நிரந்தரமாய்க் குடியேறவேண்டும்;
என்குறைதீர வேண்டும்;
முருகா,ஓம் முருகா!
முருகா,ஓம் முருகா!
very divine amma :)
ReplyDeletethanks for visit
ReplyDeleteஅழகான பாடல் அம்மா!
ReplyDelete