Tuesday, March 27, 2012

ஷண்முகா!சரணம்




( எதையும் தாங்கும் இதயமுள்ளவர்கள் என் குரலில் பாட்டைக்
   கேட்கலாம்!)

ஷண்முகா!சரணம்
       http://youtu.be/We9fKaM-YAM

( மேலுள்ள லிங்கில் சுப்பு ஐயா  அவர்கள் ஹம்சத்வனியில்
    பாடுவதை ரசித்தவண்ணம்  வாசிக்கவும்)

தும்பிக்கையான் திருத்தம்பியே,சரணம்.
அம்பிகைமைந்தா,அழகா,சரணம்.
சம்புகுமாரா,சண்முகா,சரணம்.
நம்பிராசன் திருமருகா,சரணம்.
நம்புவோர்க்கருளும் நாயகா,சரணம் .

கந்தா,...குமரா..... சரணம்...சரணம்.
கருணா...நிதியே... சரணம் ..சரணம் .
சரவணபவ ஓம்முருகா,சரணம் .

காத்யாயினி ப்ரியசுதனே ,சரணம்.
கூத்தபிரான் குருநாதா, சரணம் .
கார்த்திகைப் பெண்களின் செல்வா,சரணம் .
பார்த்தசாரதியின் மருகா,சரணம் .
காத்தருள்வாய்,கருணாகரா,சரணம்

கந்தா,...குமரா..... சரணம்...சரணம்.
கருணா...நிதியே... சரணம் ..சரணம் .
சரவணபவ ஓம்முருகா,சரணம்

சேவல் கொடியேந்தும் தேவா,சரணம்.
தேவர் படையின் தலைவா , சரணம் .
பாவைவள்ளி ப்ரியநாதா,சரணம்.
தேவயானி மணவாளா,சரணம்
 நாவில் உன் நாமம்  என்றும் இருக்கணும் . 

கந்தா,...குமரா..... சரணம்...சரணம்.
கருணா...நிதியே... சரணம் ..சரணம் .
சரவணபவ ஓம்முருகா,சரணம் .


Wednesday, March 14, 2012

அபிராமி!அருள்வாய் நீ !

(ஓராண்டுக்கு முன் பதிவிட்ட அம்மன் பாட்டை மீண்டும் காரடை நோன்புக்காக இங்கு அளிக்கிறேன் )




அபிராமி!அருள்வாய் நீ!
(மகிஷாசுரமர்த்தினி ஸ்லோக மெட்டில் பாடலாம் .)


இடர்களைநீக்கித் தடங்கல் தகர்க்குங்
கடவுளாம் கணபதியின் தாயே!
விடமுண்டகண்டனின் இடப்பாகந்தனில்
இடம்பிடித்தமர்ந்த மகாமாயே!
கருவையுங்காக்கும் கர்ப்பரக்ஷாம்பிகே ,
குருகுக ஜனனி ,காத்யாயினி,
திருக்கடவூர் அமர் அன்னை அபிராமி,
கருணையோடிங் கெழுந்தருள்வாய்நீ !

முராரிசகோதரி,புராரிமனோகரி,
பரமேஸ்வரி,பவதாரிணி!
பர்வதராஜகுமாரி,கௌரி,
சர்வேச்வரி,சுகதாயினி!
சாரதே,சாமளே ,சாம்பவி,ஷாலினி,
சாகம்பரி,திருசூலினி!
நாராயணி,நவதுர்க்கே,நீலி,
பேரருள் பொழிந்திட வருவாய் நீ!

கற்பகவல்லி,காளி,காமேஸ்வரி,
கருணாசாகரி,கல்யாணி!
கற்பனைக்கெட்டா அற்புதரூபிணி ,
அன்னபூரணி,மனோன்மணி!
சொற்பதங்கடந்த சுந்தரி,சங்கரி,
சுமதுரபாஷினி,சுஹாசினி!
நின்பதமேகதிஎன்று பணிந்தோம்,
அன்புடன் எங்களுக்கருள்வாய் நீ!