Tuesday, February 28, 2012

அதிசுந்தரம் !!



  அதிசுந்தரம் !!

பன்னிருகரம் ,மூவிரு சிரம்,
குங்கும நிறம் ,அதிசுந்தரம்!
குகன் அதிசுந்தரம் !!

அசுரரையழித்த சுர சேனானி
ஒளிருது  வெண்ணீறணிந்தவன் மேனி !
துணைவியாம்  குன்றத்தில் தேவயானி !
தணிகையில் வள்ளியாம் இளையராணி !

பன்னிருகரம் ,மூவிரு சிரம்,
குங்கும நிறம் ,அதிசுந்தரம்!
குகன் அதிசுந்தரம் !!

வற்றாது கருணை சுரந்திடும் கேணி
பழநியம்பதிவாழ் தண்டாயுதபாணி !
பிறவிக்கடல்தாண்ட உதவிடும் தோணி
"சரவணபவ "எனும் மந்திரவாணி !

பன்னிருகரம் ,மூவிரு சிரம்,
குங்கும நிறம் ,அதிசுந்தரம்!
குகன் அதிசுந்தரம் !!

Monday, February 20, 2012

சிவ பஞ்சாக்ஷரத்துதி


சிவ பஞ்சாக்ஷரத்துதி
(கீழுள்ள துதி 'நாகேந்திர ஹாராய 'என்று தொடங்கும்
சிவபஞ்சாக்ஷர ஸ்லோகத்தைத் தழுவி எழுதப்பட்டதே அன்றி
அதன் தமிழாக்கம் அல்ல.)


நஞ்சுண்ட நாதனை நெஞ்சில் நினைப்போம்;
நயனம் மூன்றுடையானை நமஸ்கரிப்போம்;
நச்சரவணிவோனின் நந்நாமம் நவில்வோம்;
நகாரமொலிக்கும் பஞ்சாக்ஷரம் ஜெபிப்போம்;

ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்

ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்


ம:
மதிசூடும் மகேசன் மகிமையை மொழிவோம் ;
மதனை எரித்தவனின் மலரடி தொழுவோம் ;
மதிநுதல் மங்கை மணாளனைத் துதிப்போம் ;
மகாரமொலிக்கும் மாமந்திரம் ஜெபிப்போம் ;

ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்

ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்

சி
சிரத்தில் நதி சூடும் சிவனடி பணிவோம்;
சசி சேகரன் சீரடி சரணடைவோம்;
சித்தத்திலரனின் சுபநாமம் பதிப்போம் ;
சிகாரமொலிக்கும் சிவமந்திரம் ஜெபிப்போம் ;

ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்

ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்

வா
வாணுதற்கண்ணி பங்கனை வாழ்த்துவோம் ;
வார்சடையோன் கழலில் சிரந் தாழ்த்துவோம் ;
வானோர் வணங்கும் வள்ளல்பேர் உவந்துரைப்போம்
வாகாரமொலிக்கும் சிவமந்திரம் ஜெபிப்போம்;

ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்

ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்


யமனை வதைத்த ஈசன் வெண்ணீறு அணிவோம் ;
யக்ஷ ஸ்வரூபனின் இணையடி பணிவோம் ;
தக்ஷயஞம் தடுத்தோன் இனியபேர் இசைப்போம் ;
யகாரமொலிக்கும் பஞ்சாக்ஷரம் ஜெபிப்போம்;

ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்

ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்
ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்

ஒம்நமச்சிவாய சிவாயநம ஓம்