ஷோடசநாம மகிமை
வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் ! சுமுகா! உந்தன் சுந்தரநாமம்
செப்பிட சித்திக்கும் ஞானப்ரகாசம்; ஏகதந்தா! உன் இணை இல்லா நாமம்
இசைப்போர் உள்ளத்தில் பொங்கும்பரவசம்.!
வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !
கபிலா! உந்தன் கனிரசநாமம்
கூறிடக்கிடைக்கும் உன் கருணாகடாக்ஷம்; கஜகர்ணா! உன்கவின்மிகுநாமம்
பாடிடக்கூடிடும் முடிவினில் மோக்ஷம்!
வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !
லம்போதரா!உன் நிர்மல நாமம்
நவின்றிட நிலைத்திடும் நித்யானந்தம்; விகடா!உந்தன் உன்னத நாமம்
உரைப்பவருள்ளத்தில் உறைந்திடும் சாந்தம்! வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !
விக்னராஜா!உன் நிகரில்லாநாமம்
பயின்றிடக்கரைந்திடும் பண்ணிய பாவம்;
விநாயகா!உன் இன்சுவைநாமம்
மொழிந்திட முறிந்திடும் முன்வினை யாவும்!
வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !
தூமகேது!உன் தேவாம்ருத நாமம்
தோத்தரித்தாலுண்டு துக்கநிவாரணம்; கணாத்யக்ஷா!உன் கல்கண்டுநாமம்
ஒன்றே விக்னவிநாச காரணம்!
வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் ! பாலச்சந்த்ரா!உன் புண்ணியநாமம்
பயின்று பணிந்தோம் உன்மலர்ப்பாதம்;
கஜானனா!உன் அருமை நாமம்
அதற்கிணை ஒன்றெனில் அது சதுர்வேதம்!
வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் ! வக்ரதுண்டா!உன் ஒப்பில்லா நாமம்
ஓதுவோர் வாழ்வினில் ஒழிந்திடும் தொல்லை; சூர்ப்பகர்ணா! உன் சுப நாமம்
சொல்பவர்க்கென்றும் சோகமே இல்லை!
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !
ஹேரம்பா!உன் ஜகம்புகழ்நாமம்
ஜெபிப்போர் குறைகள் யாவையும் தீரும்;
ஸ்கந்தபூர்வஜா!உன் திருநாமம்
ஸ்மரிப்போர் வேண்டியவை நிறைவேறும்!
வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !